இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஓப்போ நிறுவனம், சராசரியாக 10 சதவிதத்திற்கும் அதிகமான சந்தை விற்பனையை கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பல முன்னணி நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் விற்பனை நடப்பாண்டில் சரிவை சந்தித்து இருந்தாலும், ஓப்போ நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டுள்ளது.
குறிப்பாக, கடந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் 13% ஆக இருந்த ஓப்போ நிறுவனத்தின் விற்பனை, நடப்பாண்டின் 3வது காலாண்டில் 16% ஆக உயர்ந்துள்ளது. பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, அடுத்தடுத்து பல்வேறு அம்சங்களுடன் புதிய மாடல் செல்போன்களை அறிமுகப்படுத்துவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
புதிய மாடல் :
அந்த வகையில், ஓப்போ நிறுவனத்தின் புதிய மாடலான Reno 9 Series செல்போன் சீனாவில் வரும் நவம்பர் 24 அன்று மதியம் 2.30 மணியளவில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என Weibo சமூகவலைத்தளம் வாயிலாக ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் விற்பனையில் உள்ள ஓப்போ நிறுவனத்தின் Reno 8 சீரிஸ் செல்போன்களுக்கு மாற்றாகவே புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் சீனாவில் மட்டுமே இந்த செல்போன் விற்பனைக்கு வர உள்ளது. அதைதொடர்ந்து, சில வாரங்களுக்கு பிறகே இந்தியாவில் Reno 9 Series செல்போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reno 9 Series சிறப்பம்சங்கள்:
12GB மற்றும் 16GB RAM வசதிகளுடன், 128GB, 256GB மற்றும் 512GB ஆகிய ஸ்டோரேஜ் அம்சங்களுடன் Reno 9 Series செல்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 12GB RAM கொண்ட மாடலில் 4500mAh பேட்டரியும், 16GB RAM கொண்ட மாடலில் 4700mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. பஞ்ச் ஹோல் டிசைன், டூயல் ரியர் கேமரா வசதி, Marisilicon X இமேஜ் Neural Processing unit ஆகிய அம்சங்களுடன், கருப்பு மற்றும் தங்கநிறம் உள்ளிட்ட3 வண்ணங்களில் இந்த செல்போன் விற்பனைக்கு வர உள்ளது.
6.7 இன்ச் AMOLED தொடுதிரை வசதியுடன், 2.8GHZ ஆக்டோ-கோர் புராசசரும் வழங்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்சல் அல்ட்ரா-வைட் லென்சும் இடம்பெற்றுள்ளது. அதோடு 64 மெகா பிக்சல் செல்பி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் Reno 9 Series மாடல் செல்போன் விலை ரூ.39,900 ஆக நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதோடு ரெனோ 9, ரெனோ 9 ப்ரோ மற்றும் ரெனோ 9ப்ரோ பிளஸ் மடல் செல்போன்களும், நவம்பர் 24ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளன.