ஆரம்பத்தில் பட்ஜெட் விலை மொபைல்போன்கள் விற்பனையில் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் நிறுவனங்கள் அடுத்தடுத்த தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தியில்  களம் காண்பது புதிது ஒன்றுமில்லை. அந்த வகையில் பிரபல OPPO நிறுவனம் புதிய சாதனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. முன்னதாக  OPPO தனது முதல் டேப்லெட்டை சந்தைப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியானதை பார்த்தோம். அதற்கு  OPPO pad  என பெயர் வைத்திருப்பதாக சைனாவின் இணையத்தளம் ஒன்றில் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில்  OPPO அடுத்ததாக ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாம்.


முன்னதாக Realme மற்றும் OnePlus போன்ற BBK-எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இந்தியாவில் தங்களது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியிருந்தன. அவற்றிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.




91Mobiles வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  OPPO  தனது முதல் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஓப்போ ஸ்மார்ட் டிவியை , இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சைனாவில்  OPPO  தனது ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்து வருகிறது.அவற்றுள் நல்ல விற்பனையாகும் சிறந்த மாடல்களை முதலில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர முயற்சிகள் தற்போது நடைப்பெற்று வருகிறதாம்.






 OPPO  ஸ்மார்ட் டிவிகளுக்கு சீனாவில் நல்ல மவுசு. கடந்த மே மாதம் கூட  OPPO  தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை சந்தைப்படுத்தியது.K9 series வரிசையில் மூன்று ஸ்மார்ட் டிவிகளை சந்தைப்படுத்தியது. அவை அனைத்துமே 0Hz LCD panel , HDR10+ மற்றும்  HLG compatibility வசதிகளை கொண்டதாக இருந்தது. மேலும் quad-core MediaTek processor வசதி மற்றும்  ColorOS TV 2.0 இயங்குதள வசதியுடன் அறிமுகமானது. ஒப்போ புதிதாக 75-இன்ச் டிஸ்ப்ளேவை தனது ஸ்மார்ட் டிவியில் சேர்த்துள்ளது, இது  கிட்டத்தட்ட 1.07 பில்லியன் வண்ணங்களை ஆதரிக்குமாம்.


சீனாவில் இருந்து ஸ்மார்ட் டிவிகளை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது படைப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் டிவி விற்பனையில் Xiaomi சந்தையில் தனது பங்கை 23 சதவிகிதம் பெற்றுள்ளது. அதே போல சாம்சங் 17 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 11 சதவிகித பங்குடன் மூன்றாவது இடத்தில்  LG நிறுவனுமும் , 9 சதவிகித சந்தை பங்குடன் சோனி நிறுவனமும் உள்ளன. அடுத்ததாக 7 சதவிகிதத்துடன் பிரபல ஒன் பிளஸ் நிறுவனம் உள்ளது.