பிரபல பட்ஜெட் மொபைல் நிறுவனமான OPPO வெவ்வேறு தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ என்கோ எக்ஸ் என்னும் இயர் பட் டிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இவ்வகை இயர்பட்டிற்கான சில வசதிகளை அப்டேட் மூலம் கொடுக்கவுள்ளது  . முன்னதாக   Enco Free 2  மற்றும் Enco Free 2i இயர்பட்ஸில்  Double-Tap Camera Control என்னும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வசதி இயர் பட்ஸின் மூலம் மொபைல் கேமராவை கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது. இதே வசதியை OPPO நிறுவனம் Oppo Enco X, Enco Air மற்றும்  Enco Play இயர் பட்ஸ்களிலும் புகுத்தவுள்ளது. இயர் பட்ஸை இரண்டு முறை தட்டுவதன் மூலம் மொபைலின் கேமராவை கட்டுப்படுத்தலாம்.இதற்கான அப்டேட் வருகிற டிசம்பர் முதல் சீனாவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மற்ற நாடுகளுக்கு அடுத்த மாத இறுதிக்குள் கிடைத்துவிடும். 







அதே போல Oppo Enco Free 2 மற்றும்  Enco Free 2i  இயர்பட்ஸிற்கும் புதிய அப்டேட் வரவுள்ளது. அதன்படி முன்பு மொபைலின் புகைப்படம் மற்றும் எடுக்கும் வசதியை கொண்ட மேற்கண்ட இயர் பட்ஸை இரண்டு மொபைபோன்ஸுடன் இணைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கிடைக்கவுள்ள   Double-Tap Camera Control வசதியான   ColorOS 11.3 என்னும் நவீன இயங்குதள உதவியுடன் ஓப்போ உருவாக்கியுள்ளது.Double-Tap Camera Control வசதியுட, Oppo Enco X இயர்பட்கள் Enco Free 2 இயர் பட்டில் கிடைக்கும்  தனிப்பயனாக்கப்பட்ட சவுண்ட் பூஸ்ட் அம்சத்தைப் பெறும் என கூறப்படுகிறது.  இதன் மூலம் காதுகளின் உணர்திறன் அடிப்படையில் ஆடியோவை சரிசெய்ய மென்பொருள் அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது.ColorOS,ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய் 6.0  பிறகான பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும் . இதற்கு முந்தைய இயங்குதளத்தை பயன்படுத்தும் நபர்கள் ColorOS அல்லாத தொலைபேசிகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை இயக்க, HeyTap என்னும் பயன்பாட்டை நிறுவ வேண்டும்.







OPPO  நிறுவனத்தின் இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் டிசைன் கொண்டிருக்கிறது.மேலும் நாய்ஸ் கேன்சலிங் வசதியை நான்குவித மோட்களில் பயனாளர்களுக்கு வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாரு இசையின் ஒலியை செட் செய்து கொள்ள முடியும்.