ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் கூடிய மொபைல்போன் உற்பத்தியில் முதன்மையான நிறுவனமாக இருப்பது ஒன்பிளஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான oneplus nord 5g என்னும் மொபைலானது நிறைய எதிர்மறை கருத்துகளை எதிர்கொண்டது. இந்தியாவின் ஒரு சில இடங்களில் oneplus nord 5g மொபைலை வாங்கிய பயனாளர்கள் , பயன்படுத்த தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே வெடித்து சிதறுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது குறுகிய கால எடிசன் மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.OnePlus Nord 2 Pac-Man என்னும் Limited Edition மொபைல்போனை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஒன்பிளஸ் இறங்கியுள்ளது .இதற்கான மறைமுக அறிவிப்பு ஒன்றை ஒன்பிளஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில் விளையாட்டாக Pac-Man என்னும் ஸ்மைலியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
“Something you definitely won't at is coming soon...” என குறிப்பிட்டுள்ளது ஒன்பிளஸ்.விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய ஒன்பிளஸ் மொபைலானது , முந்தைய வெளியீடான OnePlus Nord 2 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில அடிப்படை தகவல்களும் தற்போது கஞ்சிந்துள்ளது. அதன் அடிப்படையில் OnePlus Nord 2 இல் உள்ள MediaTek Dimensity 1200 சிப்செட்டிற்குப் பதிலாக OnePlus Nord 2 Pac-Man Limited Edition இல் Qualcomm Snapdragon 778G SoC பொருத்தப்படும் என கூறப்படுகிறது. விரைவில் இந்தியாவில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
oneplus நிறுவனம் Harry Potter Limited Edition என்னும் ஸ்மார்ட் வாட்சை சந்தைப்படுத்தியுள்ளது. மொபைல்போன்களில் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் வாட்ச, ஸ்மார்ட் டிவி , ஹெட்போன் உள்ளிட்ட தயாரிப்புகளிலும் முன்னணி நிறுவனமாக களம் கண்டு வருகிறது. சமீபத்தில் ஆடை தயாரிப்பிலும் காலடி எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.