பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மதுவின் விலை குறைவாகவே விற்கப்படும் எனவே, கடலூர் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுப்பிரியர்கள் அடிக்கடி மது கடத்தி வருவது வழக்கம். சிலர் விலை குறைவாக இருப்பதால் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி வந்து கடலூரில் விற்பனை செய்வதும் உண்டு. இதன் படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் பகுதியில் நேற்று காவல் துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தவரை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த குமார் என்பதும், இவர்
குறிஞ்சிப்பாடி நகர பகுதியில் மதுபானங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் என அதிகாலை வேளையில் பாண்டிச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மது பானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காகவே பிரத்தியோகமாக உடை தயாரித்து அந்த உடையில் மதுபானங்களை யாருக்கும் தெரியாமல் பதுக்கி கடத்தி விற்பனை செய்து வந்திருக்கிறார் என கூறப்படுகிறது .மேலும் அது மட்டும் இன்றி இவர் குறிஞ்சிப்பாடி பகுதில் மதுபானங்களை இருசக்கர வாகனத்திலேயே விற்பனை செய்து வருவதாகவும், காவல் துறையினரிடம் மாட்டிக்கொலாமல் இருக்க வாடிக்கையாளர் ஒரு குவாட்டர் வேண்டும் என்றால் ஒரு பரோட்டா வேண்டும் என கோர்ட் வோர்ட்டை பயன்படுத்தி மது பானங்களை இவர் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனம், மது கடத்த பயன்படுத்திய பிரத்தியேக உடை மற்றும் 40 குவாட்டர் பாட்டில்கள் கைபற்றப்பட்டன. பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பானங்களை கடத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது காவல் துறையினரும் தொடர்ந்து கடத்தி வருவோரை பிடித்து கொண்டு தான் உள்ளனர் என்றாலும், வாகனங்களில் அல்லது அணிந்திருக்கும் உடைகளில் வைத்து கடத்தி வருவது தான் வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு, ஆனால் தற்பொழுது இதற்காகவே பிரத்தியோக ஆடை தயாரித்து அதனை அணிந்து நூதன முறையில் மதுபானங்களை கடத்தி விற்பனை செய்த சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.