ஃபாஸ்ட் கில்லிங் பிராண்ட் (fast killing brand) என்று அழைக்கப்பட்டும் நிறுவனம் ‘ஒன் பிளஸ்’ .  கடந்த 2014 முதலே மொபைல் போன்கள் விற்பனையில் அசத்தி வருகிறது ஒன் பிளஸ். தரமான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் பயனாளர்கள் மத்தியில் அசைக்க முடியா நன்மதிப்பினை பெற்றுள்ளது.  2013 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட  ஒன் பிளஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தனது முதல் ஸ்மார்ட்போனை 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது.வெளியிடப்பட்ட சில வருடங்களிலேயே முன்னணி வர்த்தகத்தை கைப்பற்றியது. டாப் பிராண்ட் ஆக இருந்த சாம்சங்க் உள்ளிட்ட மொபைல்களுடன் போட்டி போட ஆரமித்துவிட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனமாக மட்டும் விளங்கிய ‘ஒன் ப்ளஸ்’ நிறுவனம் இன்று பல பரிணாமங்களை எடுத்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு, ஆடியோ தயாரிப்புகள் , ஆடை தயாரிப்புகள் என பல்வேறு உற்பத்தியில் கால் பதித்துள்ளது.



 இந்நிலையில் டேப்லட் தயாரிப்பிலும் ஒன் பிளஸ் இறங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை ஒன்ப்ளஸ் பேட் என்ற பெயரில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என இணையவழி தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன. இதனை அதகளப்படுத்தாமல் ரகசியமாக செய்து வருகிறது அந்நிறுவனம்.  ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலகத்தில் (European Union Intellectual Property Office ) , “ ஒன்பிளஸ் “ இதற்காக முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது எக்சாமினேஷன் பிரிவில் ’ஒன் பிளஸ் பேட் ’ உள்ளது. இந்த தகவல் மட்டுமே தற்போது கசிந்துள்ளது. இந்நிலையில்  அனுமதி பெற்றவுடன் கூடுதல் விவரங்களை ஒன் ப்ளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது சாதனங்களின் புதிப்புப்புகள் மற்றும் நம்பகத்தன்மையை  மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதே அதன் மீது பயனாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.  முன்னாள் OPPO நிறுவனத்தின் துணைத்தலைவரே , தற்போது ஒன் பிளஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார்.  எனவே ஒன் பிளஸ் நிறுவனம் OPPO நிறுவனத்துடன் ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் ஒன்றினை மேற்க்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஓப்போ நிறுவன தலைவர்  பீட் லாவ் (Pete Lau) வெளியிட்டிருந்தார். அதில் “ OPPO உடனான இந்த ஒருங்கிணைப்பு ஒன்பிளஸின் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதில் உதவியாக இருக்கும் மேலும் இது பயனாளர்களுக்கு சிறந்த அப்டேட்டுகளை வழங்கும் ‘ என தெரிவித்திருந்தார் . பீட் லாவ்,  OPPO மற்றும் ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்களின்  தயாரிப்புகளை மேற்பார்வையிடுவதற்கான கூடுதல் பொறுப்பினை வகித்து வருகிறார்.ஆனால் இவ்விரண்டு நிறுவனங்களும் வெவ்வேறு வகையான சிறப்பம்சம் கொண்ட மொபைல் போன்களை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் பிளஸ் பிரியர்கள் இப்போதே கொண்டாடத்துவங்கிவிட்டனர்.