டிக்டாக்கில் பிரபலமான ரஃப்பில்லா வேமேன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பூவினை முகர்ந்தமையால் போதைத் தலைக்கு ஏறி என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டம் போட்டுள்ளார். 


 பூக்கள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி மணம் உண்டு. ஆனால் எல்லா வகையான பூக்களும் சிறந்தது என்று கூற முடியாது. இதிலிலும் சில விஷத்தன்மைவாய்ந்த பூக்களும் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் பூவினை அழகினைப்பார்ந்த மயங்கிய பாடகி எல்லாப்பூக்களையும் போல முகர்ந்து பார்த்துள்ளார். அதில் அவருக்கு எந்த வாசனை வரவில்லை ஆனால் போதை மட்டும் தலைக்கு ஏறியதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது ? யாருக்கு என தெரியுமா?





தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் டிக்டாக்கில் பிரபலமான பாடகி ரபீல்லா மிகவும் பிரபலமானவர். பாடுவது மட்டுமின்றி பாடல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிவருகிறார். இவர் ஒரு நாள் தன்னுடைய தோழியுடன் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது பார்ப்பது மிகவும் அழகாக இருந்த பூ ஒன்றினைப்பார்த்த இருவரும் அதனை பறித்ததோடு முகர்ந்து பார்த்துள்ளனர். அடுத்தக் கொஞ்ச நேரத்திலேயே அவர்களுக்கு ஏதோ தலை சுற்றுவது போல் தோன்றியுள்ளது. மேலும் அவர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல்  போதையில் ஆடுவது போல் சுற்றி திரிந்துள்ளனர். ஆனால் எப்படியோ வீட்டிற்கு வந்தவுடனே நன்றாக தூங்கியுள்ளனர்.


இந்நிலையில் காலையில் எழுந்தவுடன் தங்களுக்கு ஏதோ நடந்துள்ளது? ஆனால் என்ன என்று தெரியாமல் திகைத்துப்போய் யோசிக்கத்தொடங்கினர். அப்பொழுது தான் சாலையில் இருந்த பூ ஒன்றினை நுகர்ந்து பார்த்தமையைக் கண்டறிந்தனர். இதனையடுத்து அவ்விடத்திற்குச் சென்று அதேபூ வினைபறித்து வந்து நண்பர்களிடம் இதுப்பற்றி விசாிக்க தொடங்கினர். அப்பொழுது தான் அப்பூவின் பெயர் டெவில்ஸ் ப்ரீத் என்ற விஷத்தன்மையுள்ளது என தெரிந்துக்கொண்டனர். அல்கலாய்டு வகையினை சேர்ந்த டெவில்ஸ் ப்ரீத் என்ற பூ வினை முகர்ந்தால், வாய் உலர்ந்து, கண்கள் மங்களாகும் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். மேலும் அதிகமாக நுகரும் பொழுது வேகமான இதயத்துடிப்பு, வலிப்பு, கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள் எனக்கூறப்படுகிறது. இதனைக்கண்டு ஆச்சரியமடைந்த டிக்டாக் பிரபலம் இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.





இதனைக்கண்டு பலரும் ஆச்சரியமடைந்துள்ளதோடு பல்வேறு கருத்துக்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் டெவில்ஸ் ப்ரீத்  பூ தொடர்பான ஒரு ஆய்வில் ஆண்டுதோறும் இந்த பூவால் 50ஆயிரம் பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருவதாக தகவல்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தினையடுத்து நமக்கு பரிஷயப்பட்ட  பூக்களை தவிர்த்து வேறு எந்த பூக்களையும் முகர்ந்து பார்க்க யோசிக்க தான் செய்வார்கள்..!