UIDAI ன் சமீபத்திய அறிவிப்பின் படி, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மொபைல் நம்பரைப் பயன்படுத்தி ஆதார் கார்டினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இன்றைக்கு எந்தவொரு அரசின் சலுகைகளைப் பெற வேண்டும் என்றாலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதோடு வங்கிக்கணக்கு,பான் கார்டு போன்றவற்றிலும் ஆதார் எண்ணைச் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மிகவும் சுலபமாக ஆதாரைப் பெறுவதற்கான வழிமுறைகளை UIDAI கொண்டுள்ளது. குறிப்பாக அரசின் சலுகை, பிஎப்பில் பணம் எடுப்பது , தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற அனைத்திற்கும் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி வரும். ஆனால் என்ன? நாம் பயன்படுத்திய மொபைல் எண்ணை தொலைத்திருப்போம். இல்லை வேறு புதிய நம்பரை வாங்கியிருப்போம். இதனால் வேறொரு மொபைல் எண்ணை மாற்ற முயல்வோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். ஓரே ஒரு மொபைல் எண் இருந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதன் மூலம்  ஆதார் எண்ணைப் பெற்றுவிட முடியும். இதற்காக பல்வேறு வசதிகளை uidai அறிமுகப்படுத்தியுள்ளது.


அதில் , ஆதார் பிவிசி கார்டை UIDAI தளத்தில் ஆர்டர் செய்திட, பதிவு செய்த மொபைல் எண் தேவையில்லை. எந்தவொரு மொபைல் எண்ணைப்பயன்படுத்தி, ஓடிபி வெரிபிகேஷன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆர்டர் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





குறிப்பாக பிவிசி ஆதார் கார்டுக்கான சேவையை சமீபத்தில் UIDAI தொடங்கியது. இது சாதாரண அட்டையைக்காட்டிலும், பிவிசி கார்ட் மிகவும் பாதுகாப்பானது மற்றும் மழையில் நனையாது, கிழிக்கவும் முடியாது என்பதால் அனைவரும் இதனை எளிதில் ரூ. 50 கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.


PVC ஆதார் கார்டு டவுன்லோடு செய்யும் வழிமுறை:


முதலில் UIDAI ன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in  அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும்.


அடுத்து get aadhaar என்ற ஆப்சனில், order aadhaar PVC card என்ற ஆப்சனைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் order Aadhar PVc card என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


பின்னர் அந்தப்பக்கத்தில் 12 டிஜிட் ஆதார் எண்ணைப்பதிவிட வேண்டும். தொடர்ந்து captcha verification செய்ய வேண்டும். அடுத்ததாக பதிவு செய்த மொபைல் எண் இருந்தால் Send OTP கொடுக்கலாம். இல்லாவிடில் my mobile number is not registered என்ற பாக்ஸினை கிளிக் செய்து கையில் உங்களிடம் எந்த மொபைல் எண் வைத்திருக்க வேண்டுமோ? அதனைப் பதிவிட வேண்டும்.


தற்போது நீங்கள் என்ட்ரி கொடுத்திருக்கும் மொபைல் எண்ணிற்கு ஒடிபி வந்துவிடும்.பின்னர் Term and conditions ஐ கிளிக் செய்து submit என்ற ஆப்சனைக் கிளிக் செய்ய வேண்டும்.



இதனையடுத்து Make payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் கார்டு, யுபிஐ ஐடி போன்ற பல வழிகளில் மூலமாகவே பணம் செலுத்திக்கொள்ளலாம்.


பணம் செலுத்தும் தொகை முடிவுக்கு வந்ததும், உங்களுக்கு மொபைல் எண்ணிற்கு டிஜிட்டல் பேமென்ட் ரசீது வரும். அதனை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும். இதேப்போன்று  உங்களது மொபைலுக்கு மெசேஜில் service Request number யும் உபயோகித்து உங்கள் ஆர்டர் ஸ்டேட்ஸை செக் செய்துகொள்ளலாம்.


மேற்கண்ட முறைகளில் பிவிசி கார்டை ஆன்லைனிலே அப்ளே செய்துக்கொள்ளலாம். இதன்பிறகு 7 நாள்களில் உங்களது வீட்டிற்கே பிவிசி கார்டு வந்துவிடும்.