நுகர்வோரின் விருப்பப்படி சேனல் கட்டணங்களை வசூலிக்க வகை செய்யும் டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையத்தின் உத்தரவால் வரும் டிசம்பர் மாதம் முதல் நுகர்வோரின் சந்தாக் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   


கேபிள் டிவியில் கட்டணச் சேனல்கள், இலவச சேனல்கள் என இரு பிரிவுகள் உள்ளன. கட்டண சேனல்களையும் இலவச சேனல்களையும் வழங்குவதை பெரு நிறுவனங்கள் மட்டுமே  தீர்மானித்து வந்தனர். மக்கள் விரும்பாத சேனல்களையும் சேர்த்துத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில், கட்டண சேனல்கள் அதிகபட்சம் எவ்வளவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்ற வரையறையும், நுகர்வோர் தாங்கள் விரும்பும் சேனல் சிக்னல்களை மட்டும் பார்ப்பதற்கு (BoCquet channels) சுதந்திரம் கிடைத்தது.  BoCquet channels தொகுப்பில் உள்ள ஒரு சேனலின் அதிகபட்சக் கட்டணம் 12 ரூபாயாகவும் நிர்ணயித்தது.         


இருப்பினும், பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் தங்களின் அதிகபெற்ற சேனல்கள் சிலவற்றை BoCquet channels தொகுப்புக்கு வெளியே வைத்திருந்தனர். தொகுப்புக்கு வெளியே இருக்கும் சேனல்களின் விலையை நிறுவனங்கள் தங்கள் கட்டண விகிதங்களை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை அளிக்கப்பட்டது. உதாரணமாக, ஸ்டார் ப்ளஸ், ஜீ டிவி, கலர்ஸ் போன்ற பொழுதுபோக்கு சேனல்களின் கட்டணங்கள் தனியாக நிர்ணயிக்கப்பட்டன (la carte basis).   


 முன்னாதாக,தங்களுக்கு உரிய வாய்ப்பை வழங்காமல்  டிராய் தன்னிச்சையாக இந்த சட்ட விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாகவும், தங்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்காமல் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவன சங்கம்   உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.   


கடந்த 2 வருடங்களாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தாலும், டிராய்ன் சட்ட நெறிமுறைகளுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு Star & Disney India, Zee Entertainment Enterprises (ZEE), Sony Pictures Networks India (SPN) and Viacom18 போன்ற நிறுவனங்கள் வந்துள்ளன.


இதன் காரணமாக, BoCquet channels தொகுப்பில் இருந்து முக்கிய பிரபலமடைந்த சேனல் சிக்கனல்களை எடுத்து தனிச் சிறப்பு கட்டணங்களாக மாற்றியமைக்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவன அமைப்பு கூட்டாக முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, நுகர்வோரின் சந்தாக் கட்டணம் 50% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதன் காரணமாக, அரசு கேபிள் சேனல், டிடி இலவச டிடிஎச் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும் என்று கணிக்கப்படுகிறது. டிடி இலவச டிடிஎச் (DD FreeDish DTH) மூலம் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்கள் மற்றும் பல தனியார் சேனல்களையும் நாடு முழுவதும் மாதக் கட்டணம் இன்றி பிரச்சார் பாரதி ஒலிபரப்புகிறது. இதற்கான செட்டாப் பாக்ஸ்களை வெளிச் சந்தையில், வாங்க வேண்டும். இதன் மூலம் 120க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் மற்றும் பல கல்வி சேனல்கள், ஆகாஸ்வானியின் 40 செயற்கைகோள் வானொலி சேனல்கள் ஆகியவற்றைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.