யு.பி.ஐ.லைட் (UPI Lite) இ-மேண்டேட் ஃப்ரேம்ஒர்க் ( e-Mandate Framework) இணைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும். 


டிஜிட்டல் பணம் செலுத்தும் செயல்முறையை சீராக்குவதில் இந்த ஒருங்கிணைப்புக்கு ஆற்றலை மிகுந்ததாக இருக்கும் என ரிசர்வ் வங்கின் ஆளுநர் சக்திகந்த தாஸ் சமீபத்தில் நடைபெற்ற மாதாந்திர நிதி கொள்கை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். 


யு.பி.ஐ. லைட்


யு.பி.ஐ. லைட் செயலில் தற்போது வாலட்டில் 2000 ஆயிரம் ரூபாய் வரை சேமித்து வைக்கலாம். ரூ.500 வரை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். வால்ட்டில் குறைந்தபட்ச பேலன்ஸ் நிர்வகிக்க வேண்டும். இம்முறையை இ-மேண்டேட் உடன் இணைக்க வேண்டும் என்று முதலீட்டாளர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இ-மேண்டேட் கீழ இது கொண்டுவரப்பட்டதால் இனி வாலட்டில் பணம் குறைந்தால் அதுவே ரீஃபில் ஆகிவிடும். நீங்கள் கொடுத்துள்ள வங்கி கணக்கில் இருந்து தொகை எடுத்துக்கொள்ளப்படும். இனி, வாலட்டில் பணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. 


எப்படி செயல்படும்?


 இ-மேண்டேட் ஃப்ரேம்ஒர்க்குடன் இணைக்கப்பட்டதால் யு.பி.ஐ. லைட் வாலட்டில் ஒவ்வொரு முறையும் பணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, நீங்கள் உங்கள் வாலட்டில் குறிப்பிட்ட தொகையை லிமிட்டாக நிர்ணயம் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம்.பணம் செலவழித்துவிடுகிறீர்கள். நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட குறைவான தொகையே வாலட்டில் இருக்கும். புதிய மாற்றத்தின் மூலம் ஆட்டோமேட்டிக்காக வங்கி கணக்கில் இருந்து ரீஃபில் ஆகிடும்.


இதன்மூலம் பயனாளர்கள் ஒவ்வொரு முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இ-மேண்டேட் உடன் இணைத்துவிட்டால் வங்கி கணக்கில் பணம் இருந்தால் அதுவே வாலட்டில் எவ்வளவு பணம் சேர்க்க வேண்டுமோ அதை செய்துவிடும். 


 இனி தங்கள் UPI Lite -இல் இருப்பைத் தானாக நிரப்ப முடியும். இதுவரை மக்கள் ஒவ்வொரு முறையும் பணத்தை மாற்ற வேண்டிய நிலை, அதாவது டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய நிலை இருந்தது. புதிய மாற்றத்திற்குப் பிறகு, UPI Lite இல் உள்ள பணம் வரம்புக்குக் கீழே சென்ற பிறகு, வங்கிக் கணக்கிலிருந்து UPI Lite-க்கு தானாகவே மாற்றப்படும்.


யு.பி.ஐ. ரூ.500க்குள்ளாக பணப்பரிவர்த்தனை செய்ய  PIN  தேவையில்லை என்னும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டோமெட்டிக் ரீஃபில் முறை வாலட்டில் போதுமான அளவு பணம் இருக்க உதவும்.




மேலும் வாசிக்க..


Group 4 Exam Tips: கட்டாயம் இதை செய்யுங்க.. குரூப் 4 தேர்வில் பாஸாவது நிச்சயம்..! கடைசி நேர டிப்ஸ் தரும் பிரபல பயிற்சியாளர்