✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

” ஓபிஎஸ் அணி உடைந்தது” இனி இப்படித்தான்” - புகழேந்தி , கே.சி. பழனிசாமி பரபரப்பு பேட்டி..

செல்வகுமார்   |  08 Jun 2024 04:33 PM (IST)

அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி, அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபடுவோம் என கே.சி. பழனிசாமி , புகழேந்தி , ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். 

” ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்;- புகழேந்தி , கே.சி. பழனிசாமி பரபரப்பு பேட்டி.

”ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்” அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்  என ஓபிஎஸ் அணியுடன் பயணம் செய்த கே.சி. பழனிசாமி , புகழேந்தி மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

உடைந்தது ஓபிஎஸ் அணி:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது. அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் ஓபிஎஸ் அணியும் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்நிலையில் , ஓபிஎஸ் அணியுடன் பயணம் செய்த கே.சி. பழனிசாமி , புகழேந்தி மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது புகழேந்தி பேசியதாவது,

”ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்” , இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. மக்களவைத் தேர்தலில், அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது வருத்தமாக உள்ளது. தற்போது, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, எல்லோரும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளோம். அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி, அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபடுவோம் 

வடக்கில் இருந்து வந்து ஆள்வதற்கு விடமாட்டோம்,  2ஆம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வரக்கூடாது என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார். 

 

”பேசி தீர்க்க வேண்டும்”- கே.சி.பழனிசாமி

கே.சி பழனிசாமி பேசுகையில், தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்தோ, சார்ந்தோ, அதிமுக கட்சியில் யாரும் செயல்படக்கூடாது. அதிமுகவில் சிலரை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறாமல், அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிமுகவிற்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாம் அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும். இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடம் பேசி அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிப்போம் என கே.சி.பழனிசாமி தெரிவித்தார். 

ஜே.சி.டி. பிரபாகர்:

அப்போது பேசிய ஜே.சி.டி. பிரபாகர், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்தவுடன் ஒருங்கிணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தேன். அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கியுள்ளோம்.  அதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என கூட்டாக பேட்டியளித்தனர்.

Published at: 08 Jun 2024 03:34 PM (IST)
Tags: breaking news Abp nadu
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • ” ஓபிஎஸ் அணி உடைந்தது” இனி இப்படித்தான்” - புகழேந்தி , கே.சி. பழனிசாமி பரபரப்பு பேட்டி..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.