”அட்மின் ரிவ்யூ” எனும் புதிய அம்சம் வாட்ஸ்-அப் குழுவின் அட்மின்களுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கும் என கூறப்படுகிறது.


வாட்ஸ் அப்:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.


அந்த வகையில் தான், வாட்ஸ்-அப் செயலியில் உள்ள குழுக்களின் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் ”அட்மின் ரிவ்யூ” எனும் புதிய அம்சம் தற்போது சோதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


”அட்மின் ரிவ்யூ”


இந்த புதிய அம்சம் மூலம் குழுவில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களும், அதில் வரும் பொருத்தமற்ற செய்திகளை நேரடியாக குழுவின் அட்மினிடம் புகாரளிக்கும் புதிய விருப்பத்தை இந்த அம்சம் குழு அமைப்புகளின் திரையில் அறிமுகப்படுத்த உள்ளது. அவ்வாறு ஒரு செய்தி தொடர்பாக புகாரளித்தவுடன், டெலிட் ஃபார் எவரிவொன் என குறுஞ்செய்தியை நீக்கலாம் அல்லது புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் தன்மையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க அட்மினுக்கு அதிகாரம் இருக்கும். குழுவின் உரையாடலில் பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலைப் பேணுவதற்காக குறிப்பிட்ட நபரை குழுவிலிருந்து நீக்கும் அம்சமும் இதில் அடங்கும்.


நோக்கம் என்ன?


குழுவில் உள்ள எந்தவொரு நபரும் குறிப்பிட்ட குறுந்தகவலை தேர்வு செய்து ரிப்போர்ட் செய்யலாம்.  அவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் குறுந்தகவல்கள், அட்மின்களின் பார்வக்காக தனியாக பட்டியலிடப்படும். புதிய அம்சம் மூலம் குழுவின் அட்மின்கள் தற்போது குழுவைத் திறமையாகக் கண்காணிக்க முடியும். அவர்கள் ஆக்டிவாக இல்லாதபோதும், உரையாடல் மரியாதைக்குரியதாகவும் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்கிறது. தற்போதைய சூழலில் சில பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெறுகிறது. சோதனை ஓட்டம் முடிந்த பின்பு, எதிர்வரும் நாட்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வீடியோ மெசேஜ் வசதி:


'Short Video Message’ என்ற புதிய அம்சத்தை மெட்டா அண்மையில் கொண்டு வந்தது. இதன் மூலம், நாம் ஒருவருக்கு வீடியோ மூலம் நமது  தகவல்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.  Text Box என்ற ஆப்ஷனுக்கு அருகில் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் 60 நிமிடங்கள் பேசி வீடியோவாக மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது ஒருவருக்கு நாம் டெக்ஸ்டாக அனுப்பும் நேரத்தை குறைப்பதோடு, எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கும் என தெரிகிறது.  தற்போது இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க பெற, விரையில் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பயன்படுத்துவது எப்படி?


ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் ஒருவடைய சாட் பேஜ்க்கு சென்று ’video message' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அதனை 60 நிமிடங்கள் பேசி வீடியோவாக மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளலாம்.