ஹார்லி டேவிட்சன் X440 மாடல் மோட்டார்சைக்கிளின் புதிய விலை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஹார்லி - டேவிட்சன் X440:


சொகுசு இருசக்கர வாகனங்களுக்கு பெயர்போன ஹார்லி - டேவிட்சன் நிறுவனம், முதன்முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல் இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளது. ஹார்லி - டேவிட்சன் X440 என பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், கடந்த மாதம் 3ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  வாகனம் அறிமுகமானது முதலே தீவிரமாக நடைபெற்று வந்த இதற்கான முன்பதிவு கடந்த 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது.  இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கான சோதனை ஓட்டம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதே இரண்டாம் கட்ட முன்பதிவு தொடங்கும் போது, ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மாற்றியமைக்கப்பட்ட விலை:


இந்நிலையில் தான் ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை இந்திய சந்தையில் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, என்ட்ரி லெவல் மாடலான X440 விலை தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவிட் என்று அழைக்கப்படும் மிட்-ரேன்ஜ் மாடலின் முந்தைய விலை ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில்,  தற்போது அதன் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. இதன் S வெர்ஷன் விலை முன்னதாக ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அது ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக மாறியுள்ளது. 


இன்ஜின் விவரங்கள்:


Harley-Davidson X440 ஆனது 440 cc சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு, 2-வால்வ் பெட்ரோல்  இன்ஜின் ஆகும், இது 26HP மற்றும் அதிகபட்சமாக 38Nm முறுக்குவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஸ்லிப்பர் கிளட்ச்சையும் பெற்றுள்ளது. முன்பதிவு செய்த தேதிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் ஹார்லி - டேவிட்சன் X440 வாகனங்களின் விநியோகம் தொடங்கும் என ஹீரோ மோட்டோகார்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிறப்பம்சங்கள்:


இதன் தொடக்க மாடலான டெனிம்  டெனிம் , வயர்-ஸ்போக் வீல்களுடன் வருகிறது, விவிட் மாறுபாடு அலாய் வீல்களை கொண்டுள்ளது. S பதிப்பு குறைந்த வகைகளை விட அதிக பிரீமியம் தோற்றமளிக்கும் டயமண்ட்-கட் அலாய் வீல்களை பெற்றுள்ளது. டாப்-எண்ட் எஸ் டிரிம், இ-சிம் உடன் வேலை செய்யும் பிரீமியம் இணைப்புத் தொகுதியிலிருந்தும் பயனடைகிறது. ஹார்லி டேவிட்சனின் X440 மாடல் வாகன, இந்திய சந்தையில்  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ட்ரையம்ப் ஸ்பீட் 400 போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது . 


Car loan Information:

Calculate Car Loan EMI