உலக அளவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வாடிக்கையாளர்களை சமீபத்தில் இழந்தது. இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்ததால் அதிர்ச்சிக்குள்ளானது அந்நிறுவனம். இதனைத்தொடர்ந்து, இத்தனை ஆண்டுகள் நடைமுறைப்படுத்தி வந்த சில வழக்கங்களை மாற்ற திட்டமிட்டனர். அதன்படி, தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஆப் விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை வழங்கி வருகிறது. 


இந்த வருடமே..


இனி விளம்பரங்களை கொடுக்கப்போவதாகவும் அதுவும் இந்த வருடத்தில் கடைசியில் இது நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2022, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இதுதான் திட்டம் என நெட்பிளிக்ஸ் தங்களது ஊழிகர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பாஸ்வேர்டு பகிர்தல் என்ற வசதியையும் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்போவதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது ஒருவரிடம் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் இருந்தால், அவருடைய அக்கவுண்டை, மற்ற டிவைஸ்களில், யூசர் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து பயன்படுத்தலாம். தற்போது, வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்த, இந்த பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சனில் மாற்றம் செய்ய இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.




என்ன சொல்றாங்க..?


முன்னதாக இது குறித்து பேசிய நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர்  ரீட் ஹேஸ்டிங்ஸ்(Reed Hastings), இவ்வளவு காலமாக நெட்ஃபிளிக்ஸில் விளம்பங்கள் கிடையாது; பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சன் இருந்தது; இவைகளை பயனாளர்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், இனிவரும் காலத்தில் நெட்ஃபிளிக்ஸில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலண்டில் மேலும், 2 மில்லியன் வாடிக்கையாளர்களை இழக்கும் என கணித்துள்ளது என்றார்.


மற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள்..


நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் போட்டியாளர்களான மற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் அனைவரும் விளம்பர ஆதரவு சேவைகளை வழங்குகிறார்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் நெட்ஃபிக்ஸ் பல ஆண்டுகளாக விளம்பரங்களை வழங்கும் என்று ஊகித்திருந்தன. ஆனால், வெகு காலமாக இந்த நடைமுறைக்கு இணை நிறுவனர் ஹேஸ்டிங் அனுமதி அளிக்கவில்லை. 




நெட்ஃபிக்ஸ் உலக அளவில் உள்ள மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது.  ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய, புதிய வாடிக்கையாளர்களை சிறந்த திட்டங்களுடன் கவர்ந்திழுப்பதன் மூலமும், சில வழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலமும்  இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேற முடியும் என்று அந்நிறுவனம் நம்புகிறது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்கள், டி.வி. ஷோக்களுக்காக செலவிடும் தொகையும் குறைக்க இருக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண