சம்பள பாக்கியை கொடுக்காமல் ஏமாற்றுவதாக துணை நடிகை நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலுங்கு படங்களில் துணை நடிகையாக இருப்பவர் சுனிதா போயா. இவர் பல படங்களில் துணை நடிகையாகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் படம் ஒன்றுக்கு ஒப்பந்தமான சுனிதா, சம்பளம் தொடர்பான ஒப்பந்தத்தையும் போட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம் பேசிய சம்பள பணத்தை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் வாசுவிடம் முறையிட்டுள்ளார். அவரும் பணத்தை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சுனிதா அரை நிர்வாண போராட்டத்தில் குதித்தார்.
திடீர் பரபரப்பு..
ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் வாசுவின் தயாரிப்பு நிறுவன அலுவலகம் உள்ளது. அங்கு சென்ற சுனிதா ஆடையை கழட்டி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட சாலை துப்புரவு பணியாளர்கள் இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் சுனிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பரபர சுனிதா..
அடிக்கடி போராட்டங்கள் மூலம் பரபரப்பை கிளப்புவார் சுனிதா. தயாரிப்பாளர் வாசுவுக்கு எதிராக ஏற்கெனவே பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் சுனிதா. படங்களில் வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக ஏற்கெனவே போராட்டம் செய்துள்ளார். அதேபோல பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மகேஷ் என்பவர் மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
சும்மா இருடின்னு சொல்ல முடியாது..இப்போ உலகம் வேற மாதிரி: MeToo குறித்து ஆண்ட்ரியா.. ஒரு ஃப்ளாஷ்பேக்