சென்னை காசிமேடு பழைய அமராஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மதன். இவருக்கு வயது 27. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா. அவருக்கு வயது 25. மதன் ஹேமலதாவை காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மதன் கட்டுக்கோப்பான உடலை பராமரித்து வந்ததால் அவர் ஆணழகன் பட்டமும் பெற்றுள்ளார். காவல்துறையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மதன் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார்.


திருமணமாகிய புதியதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மதனுக்கும், ஹேமலதாவிற்கும் இடையே சில நாட்களுக்கு பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2-ந் தேதி மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மதன் மனைவி ஹேமலதாவிற்கு வாட்ஸ்அப்-பில் வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார்.




அந்த வீடியோவில் “ உனக்கு விவகாரத்து தானே வேண்டும் என்று கேட்டாய். இன்னும் 12 மணி நேரத்தில் நீயே தாலியை கழற்றிவிடுவாய். நீ சந்தோஷமாக இரு”  என்று கூறியபடி தூக்கில் தொங்குவது போல வீடியோ அனுப்பியுள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஹேமலதா மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மதனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மதனின் உறவினர்கள் காசிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காசிமேடு போலீசார் மதனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.





பின்னர், மதனின் உடலை தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஹேமலதாவின் உறவினர்களும், மதனின் பெற்றோர் தரப்பினரும் கேட்டு காவல்நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் சட்ட விதிகளின்படி, மதனின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அவரது வீட்டில் 1 மணி நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் மதனின் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினர். இரு தரப்பினரும் இதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர் காவல்நிலையத்தில் இருந்து கலைந்து சென்றனர்.  


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண