உலகளவில் ஓடிடி தளங்களில் நெட்ஃப்ளிக்ஸ் மிக பிரபலம். அமேசான், ஹாட்ஸ்டார் என ஓடிடி தளங்கள் இருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸுக்கு அதிக பயனர்கள் இருக்கிறார்கள். உலகளவில் 1.70 கோடி பேரும் இந்தியாவில் 50 லட்சம் பேரும் அந்நிறுவனத்திற்கு பயனர்களாக இருக்கின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கேமிங் துறையில் காலடி எடுத்துவைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில், “உடல்,மன விளையாட்டுகள் போன்றவைகளை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் பயனர்களை மகிழ்விப்பதையும் நாங்கள் விரும்புகிறோம்.

அதனால்தான் மொபைலில் நெட்ஃபிளிக்ஸ் கேம்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் எங்கள் முதல் படியை எடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று முதல் அனைத்து இடங்களிலும் உள்ள நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள், “Stranger Things: 1984 (BonusXP), Stranger Things 3: The Game (BonusXP), shoothing hoops(Frosty Pop), Card Blast (Amuzo & Rogue Games),Teeter Up என்ற  ஐந்து மொபைல் கேம்களை விளையாடலாம்.

Continues below advertisement

சிறந்த கேமிங் அனுபவத்தை உருவாக்கும் ஆரம்ப நாட்களில் நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் இந்தப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் கேம்களை விளையாடுவதற்கு சந்தாதாரராக இருந்தால்போதும் இதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. சில கேம்கள் விளையாடுவதற்கு இணைய வசதி வேண்டும். சில கேம்களை இணைய வசதி இல்லாமலும் விளையாடலாம். மேலும் இந்த கேம்கள் பல மொழிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி தளத்தில் செயல்படவும், வீடியோ கேம்கள் விளையாடுவதிலும் தனித்தனியாக பல லட்சம் பயனர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களை ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை நெட்ஃபிளிக்ஸ் இதன் மூலம் கையில் எடுத்திருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். நெட்ஃபிளிக்ஸின் இந்த திட்டத்தால் மற்ற ஓடிடி நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Watch Video | சிசிடிவி கேமராவுடன் கண்ணாமூச்சி ரேரே.. விளையாடிய கிளி; வீடியோ வைரல்!

WATCH VIDEO : "வாங்களேன்... வந்து என் கட்சியில சேந்துக்கோங்க..." பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்

Watch Video: `நேர்காணலின் போது அடக்க முடியாமல் சிரித்த நெறியாளர்!’ - பாகிஸ்தானில் பரவும் வைரல் வீடியோ!