பூமியிலிருந்து ஓரியன் விண்கலம் அதிக தூரம் மேற்கொண்டுள்ளது மேலும் இது குறித்து ஆர்டெமிஸ் 1 எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.






நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகம் 39B இலிருந்து நிலவை நோக்கிய பயணத்தை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. ஆர்ட்டெமிஸ் 1 என்பது ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் இல்லாத விமான சோதனையாக மேற்கொள்ளப்படுகிறது.


2025-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி மையமான நாசா திட்டமிட்டு வந்தது. 3 முறை ஒத்திவைக்கப்பட்ட திட்டமானது, நவமொஅர் 16ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஓரியன் விண்கலம் உள்ளது. நிலவின் மேல்பகுதியில் நிலைநிறுத்தப்படும் ஓரியன் விண்கலமானது, நிலவின் வான்வெளியில் ஆய்வை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. 


பூமியிலிருந்து ஓரியன் விண்கலம் அதிக தூரம் பயணம் மேற்கொண்டுள்ளது. இதனை நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்ட புகைப்படத்தில் (ஆர்ட்டெமிஸ் I வாகனம் எடுத்த புகைப்படம்), பூமி மற்றும் சந்திரன் இரண்டையும் பின்னணியில் தெரியும் வகையில் அமைந்திருந்தது. இந்த புகைப்படங்கள் அனைத்தும்  அப்பல்லோ மற்றும் வாயேஜர் 1 இன் "பேல் ப்ளூ டாட்" எடுத்த புகைப்படங்கள் போல இருந்தது. இந்த புகைப்படத்தின் மூலம் மனிதர்களின் வீடான பூமி அண்டத்தை ஒப்பிடும் போது எவ்வளவு சிறிய பங்கை வகிக்கிறது என்பதை தெளிவுப்படுத்துகிறது.




ஓரியன் பூமியிலிருந்து அதன் அதிகபட்ச தூரம் அடைந்து அதாவது 268,563 மைல் தூரம் அடைந்தது. அதனை சுற்றி ஸ்னாப்ஷாட்டை எடுத்ததுள்ளது. 1970 இல் 248,655 மைல்கள் என்ற அப்பல்லோ 13 இன் சாதனையை முறியடித்து, மனிதர்கள் சார்ந்த எந்த விண்கலமும் பயணித்த மிக அதிக தூரம் இதுவே என கூறப்படுகிறது.




ஆர்ட்டெமிஸ் I பூமியிலிருந்து அதிக தொலைவு பயணம் மேற்கொண்ட முதல் வின்கலம் இதுவே என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்பல்லோ 13 நாசாவின் அவசரகால விமானமாகும்.  ஆர்ட்டெமிஸ் வாகனம் இதுவரை நாசாவின் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா ஓரியன் மிஷன் குழு இதுவரை 124 முக்கிய நோக்கங்களில் 31 ஐ மட்டுமே முடித்திருந்தாலும், மீதமுள்ள முக்கிய நோக்கங்களில் பாதி செயல்பாட்டில் உள்ளன, மீதமுள்ளவை பெரும்பாலும் பூமிக்குத் திரும்புவதையே சார்ந்துள்ளது.  


ஓரியன் டிசம்பர் 11 ஆம் தேதி சான் டியாகோ கடற்கரையில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டம் பல தாமதங்களைச் கடந்து விண்ணில் ஏவப்பட்டது, 2025 அல்லது 2026 வரை சந்திரனில் மனிதர்களை தரையிறக்கும் திட்டமில்லை. இருப்பினும், ஆர்ட்டெமிஸ் I இன் தற்போதைய செயல்திறன் விண்வெளி நிறுவனத்தின் முயற்சிகள் இறுதியாக பயனளித்துள்ளதாக கூறுகிறது.