சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல, அத்தியாவசிய பணப்பரிமாற்றத்தில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. பல தொழில் நிறுவனங்கள் வங்கிகள் மூலமான நிதி உதவியையே நம்பி இயங்கி வருகின்றன. இதனால் வங்கிகள் செயல்படும் நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துஇ வைத்து இருந்த்யால், அநாவசிய அலைச்சலை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியும்.
வங்கிகளுக்கு விடுமுறை:
பொதுவாக, மாதத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி மாதத்தின் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதோடு பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் வங்கிகளுக்கு அதிகப்படியான விடுமுறைகள் விடுக்கப்பட்டன. ஆனால், நவம்பர் மாதத்தில் பண்டிகை அல்லது வேறு விடுமுறைகள் ஏதும் இல்லை. இதனால் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.
டிசம்பர் மாத விடுமுறை நிலவரம்:
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, டிசம்பர் மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை பட்டியல் மாநிலம் வாரியாக மாறுபடும். உதாரணமாக, ஷில்லாங்கில் உள்ள பா-டோகன் நெங்மிஞ்சா சங்மாவுக்கு வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நாட்களில் கோவா, பீகார் அல்லது பிற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
டிசம்பர் 2022ல் வங்கி விடுமுறை
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா – பனாஜி (கோவா)
டிசம்பர் 12: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா – ஷில்லாங்
டிசம்பர் 19: கோவா விடுதலை நாள் – பனாஜி
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா – ஷில்லாங்
டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நம்சூங் – ஐஸ்வால், காங்டாக், ஷில்லாங்
டிசம்பர் 29: குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் – சண்டிகர்<br>டிசம்பர் 30: யு கியாங் நங்பா – ஷில்லாங்
டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ் – ஐஸ்வால்
டிசம்பர் 2022 இல் வார இறுதி விடுமுறைகள்
டிசம்பர் 4: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
டிசம்பர் 10: வாராந்திர விடுமுறை (இரண்டாவது சனிக்கிழமை)
டிசம்பர் 11: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
டிசம்பர் 24: வாராந்திர விடுமுறை (நான்காவது சனிக்கிழமை)
டிசம்பர் 25: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
மேற்கூறிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், UPI சேவைகள் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்