மார்க்கெட்டில் புதுப்புது செல்போன் நிறுவனங்கள் முளைத்துவிட்டாலும் மோட்டோரோலாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் எப்போது உண்டு. மற்ற போட்டி நிறுவனங்கள் போல அடிக்கடி செல்போனை அறிமுகம் செய்யாவிட்டாலும் அவ்வப்போது செல்போன் ரிலீஸ் செய்து தன் ரசிகர்களை தன் கைக்குள்ளேயே வைத்துள்ளது மோடோ. இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G71 5G ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம்.
செல்போன் வெளியிடப்பாட்டால்தான் அதிகாரபூர்வமான முழு தொழில்நுட்ப விவரங்கள் தெரியவரும். ஆனாலும் வெளியாக தகவலின்படி இந்த மொபைல் இந்தியாவில் ரூ.18999ஆக இருக்குமென தெரிகிறது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என்ற மாடலாக இந்த செல்போன் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த மொபைல் ஏற்கெனவே ஐரோப்பாவில் வெளியான நிலையில் அங்கு கிட்டத்தட்ட ரூ.25ஆயிரத்துக்கு இந்த மொபைல் விற்கப்படுகிறது.
இதன் டிஸ்பிளே தற்போது வரும் செல்போன்களின் டிஸ்பிளேவைப் போலவே இருக்கலாம். அதாவது 6.4 இஞ்ச் FHD+ OLED டிஸ்பிளே. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளே எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை 3 வகையான பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் கொண்ட பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ், மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் கொண்டதாக இருக்கும்.
பேட்டரியில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறது மோடோ. அதிவேக 33W சார்ஜர் மற்றும் 5000mAh பேட்டரி கெபாசிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான வைஃபை, ப்ளூடூத், சி டைப் USB கொடுக்கப்பட்டிருக்கும். பச்சை, நீலம், கருப்பு என மூன்று நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்