கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 5 இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. 5 வது சீசனின் கடைசி எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் தாமரை செல்வி எலிமினேட் ஆனார். தொடக்கத்தில் இருந்தே கிராமத்து பெண்ணை எதிரொலிப்பதாக இருந்த தாமரைக்கு நேற்று பலர் பிரியாவிடை அளித்தனர்.
தாமரை குறித்து பேசிய பிரியங்கா, ஒரு கிராமத்து பெண் எதுவுமே தெரியாமல் இத்தனை தூரம் பயணித்து வந்ததே பெரிய வெற்றி என்றார். மேலும், பிக் பாஸ் சம்ளத்தை வைத்து தன்னுடைய கடனை பாதி அடைத்துவிடுவேன் என்றும், வெளியே சென்று சம்பாதிக்கும் பணத்தை வைத்து மொத்த கடனையும் அடைப்பேன் என தாமரை கூறியதாக பிரியங்கா உருக்கமாக தெரிவித்து இருந்தார்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது ராஜுவிடம் உருக்கமாக பேசிய தாமரை, நீ எனக்கு பெரிய பையன் மாதிரி. ஜெயிச்சுட்டு வெளியே வா என்றார். அருகில் இருந்தவர்களிடம் ராஜுவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினார்.
ராஜு - தாமரை பாசம் குறித்து இணையத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். தாமரை அடுத்தடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவார் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்
நேற்று நிகழ்ச்சியின் போது தாமரை குறித்து கமல்ஹாசனே உருகி பேசியது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தாமரை வெளியேறியது குறித்து பேசிய கமல், “இங்கு வந்தது வெற்றி இல்லை. இதை விட பெரிய வெற்றியை அடைய வேண்டும். நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் யார் வேண்டுமானாலும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கும். அது மிஸ் ஆகிட்டது” என வருத்தப்பட்டார். மேலும் மக்கள் மீது நம்பிக்கை இருக்கு. நீங்கள் வெளியே போய் ஜெயிப்பீர்கள் என்றார்.