இந்தியாவை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மோட்டார் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதே போல இந்தியாவில் டொயாட்டோ நிறுவனம் SUV எனப்படும் பெரிய ரக கார்கள் உற்பத்தியில் பெரும் பங்கை வகித்து வருகின்றது. 


கிய்ச்சிரோ டொயோட்டா என்பவரால் 1930-களில் ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு டொயோட்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. பல நாடுகளில் பல வகை கார்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் அண்மையில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் சார்பில் கடந்த ஜூலை 28 2020 முதல் 11 பிப்ரவரி 2021 வரையில் தயாரிக்கப்பட்ட சுமார் 9000-க்கும் அதிகமான டொயாட்டோ Urban Cruiser வகை கார்களை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது அந்த நிறுவனம். 


அந்த பேட்சில் தயாரான கார்களில் டிரைவர் மற்றும் பக்கத்து இருக்கைகளில் இருக்கும் Air Bag கட்டமைப்பில் கோளாறு இருக்க வாய்ப்பிருப்பதால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் தயாரிக்கப்பட்ட கார்களை அந்த நிறுவனம் ரீகால் செய்து வருகின்றது. மேலும் Air Bag செயல்பாட்டில் கோளாறு உள்ள பட்சத்தில் நிறுவனத்தை தொடர்புகொள்ள கார் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.