2013ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் தான் பொன்ராம். ரஜினி முருகன், சீமராஜா என்று தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனை வைத்து மூன்று படங்கள் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தையும் இவர் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தை மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை கொண்டு பொன்ராம் இயக்குகிறார் என்ற தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியின் 46வது படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் மக்கள் செல்வன் காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் வெளியான மோஷன் போஸ்டரும் அதை உறுதிசெய்கிறது. 


இந்நிலையில் இந்த படத்தில் சின்னத்திரையில் தற்போது கொடிகட்டி பறக்கும் நடிகர் புகழ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் படக்குழுவிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


தனது தனித்துவமான குணத்தால் பலராலும் புகழ் விரும்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரபல நடிகர் அருண் விஜய் அவர்களுடன் இணைந்து நடிக்க புகழ்  ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.