சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில், அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 
பெருந்துறை தொகுதியில் போட்டியிட அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான தோப்பு வெங்கடாச்சலம் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக ஜெயக்குமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.




இந்த நிலையில், தோப்பு வெங்கடாச்சலம் நேற்று பெருந்துறை தொகுதியில் போட்டியிட சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இது கட்சித் தலைமை மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த காரணத்தாலும் தோப்பு வெங்கடாச்சலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.