Phone Tapping: உங்களது செல்போன் மற்றவர்களால் ஒட்டுக்கேட்கப்படுவதை தடுக்க,  பின்பற்ற வேண்டிய 7 ஆலோசனகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


இணைய வழி தாக்குதல்கள்:


இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் பயனாளர்கள், மர்ம நபர்களால் இணையவழி தாக்குதலுக்கு ஆளாவதாக கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் எச்சரித்தது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம் வடிவமைத்த பெகாசஸ் போன்ற வைரஸ்கள் கொண்டு, இணைய வழி தாக்குதல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் டிஜிட்டல் மயமான இந்த காலத்தில், தனிநபர்கள் தங்களது டிஜிட்டல் தரவுகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே நமது டிஜிட்டல் தரவுகள் குவிந்துள்ள, நமது ஃபோன்களை மற்றவர் ஒட்டுக்கேட்பதை தவிர்ப்பது எப்படி என்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


சீரான இடைவெளியில் ஃபோனை அப்டேட் செய்யுங்கள்:


உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்கள் இரண்டிற்கும், ஆட்டோமேடிக் அப்டேட் மூலம், சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை உறுதிசெய்யவும். சீரான இடைவெளியில் செய்யப்படும் அப்டேட்கள் பாதுகாப்பு பிரச்னகளை  சரிசெய்கிறது.  அவை சாத்தியமான ஒட்டுக்கேட்பு சூழலை தடுக்கும். ஐபோன் பயனர்கள், உங்கள் சாதனத்தை ஜெயில்பிரேக் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் அதன் கட்டமைப்பு பாதிக்கப்படுவது, புட்த்ய பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும்.


என்க்ரிப்டட் கம்யூனிகேஷன் செயலிகள்:


உங்கள் உரையாடல்களின் பாதுகாப்பை மேம்படுத்த, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்கும் தகவல் தொடர்பு செயலிகளை பயன்படுத்துங்கள். பகிரப்பட்ட தகவல்களை நீங்களும் பெறுநரும் மட்டுமே படிக்க முடியும் என்பதை இந்தத் தொழில்நுட்பம் உறுதிசெய்கிறது.  உங்கள் தகவல்தொடர்புகளை இடைமறிக்கும் எந்த முயற்சியையும் இந்த அம்சம் முறியடிக்கும்.


கால் ஃபார்வாடை தவிருங்கள்:


உங்கள் அனுமதியின்றி உங்கள் அழைப்புகள் மற்றொருவருக்கு ஃபார்வர்ட் செய்யப்படுவதை தடுக்க, அனைத்து கால் ஃபார்வர்ட் செட்டிங்ஸையும் செயலிழக்கச் செய்யுங்கள்.


VPNஐப் பயன்படுத்துங்கள்:


உங்கள் தொலைபேசியில் இணையத்தை அணுகும் போது, VPN செயலியை பயன்படுத்துங்கள். உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளை VPN என்க்ரிப்ட் செய்கிறது.  இது உங்கள் டிஜிட்டல் தகவல்தொடர்புகளை மற்றவர்கள் திருடுவதை தவிர்க்கிறது. 


ஆபத்தான செயலிகளை நீக்குங்கள்:


பயன்படுத்தப்படாத, காலாவதியான அல்லது சந்தேகத்திற்கிடமான செயலிகளை உங்கள் ஃபோனில் இருந்து நீக்குங்கள். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஒட்டுக்கேட்பதற்கு பயன்படுத்தக்கூடிய பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம். 


வலுவான பாதுகாப்பு மென்பொருளை பயன்படுத்துங்கள்:


டிஜிட்டல் அச்சுறுத்தல்களை தவிர்க்க உதவும் வலுவான பாதுகாப்பு மென்பொருளை ஃபோனில் பயன்படுத்தலாம். து ஒட்டுக்கேட்பதற்கு பயன்படுத்தப்படும் மோசமான மென்பொருள் உள்ளிட்ட,   உங்கள் சாதனத்திலிருந்து இருக்கும் தீங்கிழைக்கும் மென்பொருளைக் கண்டறிந்து அகற்றும்.


ஃபேக்டரி ரீ-செட்:


உங்கள் ஃபோன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகித்தால், அதனை ஃபேக்டரி ரிசெட் செய்வதன் மூலம் எந்தவொரு ஊடுருவும் மென்பொருளையும் அகற்றலாம். இருப்பினும், உங்கள் மதிப்புமிக்க தகவலை இழப்பதைத் தவிர்க்க, ரீசெட்டிற்கு முன், அத்தியாவசியத் தரவுகளை கூகுள் டிரைவில் சேமித்துக் கொள்ளுங்கள்.


இந்த வழிமுறைகளை உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், உங்கள் மொபைல் ஃபோனின் பாதுகாப்பை மேம்படுத்தலாம் மற்றும் அது ஒட்டுக் கேட்கப்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.