சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆட்டோ செயலியின் Android Auto for Phone Screens செயலி பழைய கார்களில் செயலிழந்து விடும் எனக் கூறப்பட்டுள்ளது.


சில வாரங்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனம் சார்பில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ செயலியின் புதிய அப்டேட் வெளியிடப்படும் எனவும், அதில் புதிய இண்டர்ஃபேஸ் சேர்க்கப்பட்டு, கூகுள் அசிஸ்டண்ட் தரும் பரிந்துரைகளுக்கு ஏற்ப பதில்கள் தரும் விதமாக மாற்றப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதே போல, மற்றொரு அறிக்கையில், ஆண்ட்ராய்ட் ஆட்டோ செயலியின் பீட்டா வடிவத்தின் உருவாக்கத்திலும், வயர்லெஸ் கனெக்‌ஷனிலும் சில பிரச்னைகளை எதிர்கொள்வதாக பயனாளர்கள் தெரிவிப்பதாகக் கூறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 


கூகுள் நிறுவனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் 9to5Google தளம் Android Auto for Phone Screens செயலியைப் பயன்படுத்துவோருக்கு `விரைவில் Android Auto for Phone Screens செயலி செயல்படுவது நிறுத்தப்படும்’ எனக் காட்டுவதாகக் கூறியிருந்தது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படாத நிலையில், விரைவில் எந்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, Android 12 வெளியிடப்பட்ட பிறகு, இந்த தனி செயலி நிறுத்தப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 



ஆண்ட்ராய்ட் ஆட்டோ செயலியைப் பயன்படுத்துவோருள் பலரும் அதன் பீட்டா வெர்ஷனில் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். கூகுள் நிறுவனம் இந்த செயலியைப் பற்றி புதிய செட்டப் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வயர்லெஸ் கனெக்‌ஷன் மூலமாக கனெக்ட் செய்ய முடியவில்லை என்ற மெசேஜைத் தொடர்ந்து காட்டுவதாகவும் பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனினும், காரில் கனெக்ட் செய்யப்படும் போது, எந்தப் பிரச்னையும் இல்லாமல் வேலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனம் புதிதாக `ஆண்ட்ராய்ட் ஆட்டோ’ செயலி அப்டேட் செய்யப்பட்டு வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. அதனால் தற்போதைய பிரச்சினைகள் இதோடு தொடர்புடையவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. புதிதாக அப்டேட் செய்யப்படும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ செயலியின் வெர்ஷனில் புதிய யூசர் இண்டெர்ஃபேஸ் வழங்கப்பட்டு, ஒரே ஸ்க்ரீனில் நேவிகேஷன், மீடியா, கம்யூனிகேஷன் முதலானவை இடம்பெறும். மேலும், கூகுள் அசிஸ்டண்ட் வழங்கும் மெசேஜ், இசை பரிந்துரைகள் முதலானவற்றையும் இது வழங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலமாக வாகனம் ஓட்டும் அனுபவம் மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


Car loan Information:

Calculate Car Loan EMI