Vivo Y300 5G மாடல் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபல ஸ்மார்ட்ஃபோன் விற்பனை செய்யும் நிறுவனமான விவோ தனது புதிய மாடலான ’Vivo Y300 5G ’-ஐ அறிமுகம் செய்துள்ளது. Snapdragon 4 Gen 2 chipset, 80 வாட் விரைவு சார்ஜிங், 5,000mAh பேட்டரி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
விவோ மாடலில் 'Y' சீரிஸ் விரிவுப்படுத்தப்பட்டு 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா core Snapdragon 4 Gen 2 chipset full-HD+ (1,080 x 2,400 pixels) AMOLED ஸ்க்ரீன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டது இந்த மாடல்.
1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், pixel density of 394ppi, 8 GB of LPDDR4X RAM, 256GB Internal ஸ்டோரேஜ், 2TB மைக்ரோ SD card மூலம் ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யலாம்.
கேமராவை பொறுத்தவரை இரண்டு ரியர் கேமரா உடன் 50MP Sony IMX882 ப்ரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார், 32MP செல்ஃபி கேமரா, AI உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 80W சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங், 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இரண்டு ஸ்டிரீயோ ஸ்பீக்கர்ஸ், டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் உள்ளது. 5G and 4G, Wi-Fi, ப்ளூடுத் 5.0, OTG, GPS, NavIC, BeiDou, and Galileo. Android 14, FuntouchOS 14 சாப்ஃட்வேர் கொண்டுள்ளது. பச்சை (Emerald Green). பர்பிள் ( Phantom Purple), சில்வர் (Titanium Silver) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
விலை விவரம்:
விவோ Y300 5G 8GB + 128GB ரேஞ் ரூ. 21,999-க்கும் 8GB + 256GB ரேஞ்ச் ரூ.23,999க்கும் கிடைக்கும். இந்தியாவில் இப்போது இந்த மாடல் ப்ரீ-புக்கிங் ஓபன் ஆகியுள்ளது. வரும் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. pre-book செய்யும்போது ரூ. 2,000 cashback ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.