Xiaomi, Redmi A4 5G மொபைலை, ஒரு மாதத்திற்கு முன்பு மிகவும் மலிவு விலை 5G போன்களில் ஒன்றை விற்பனை வருவதாக அறிவித்தது. இந்த மொபைலானது தள்ளுபடியுடன் INR 8,499 ($100) சில்லறை விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மொபைலானது இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பமசங்கள்:
- Redmi A4 5G ஆனது HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 இன்ச் 120 Hz IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது
- ஸ்னாப்டிராகன் 4s Gen 2 சிப்செட் அமைப்பு இருக்கிறது
- 18W வயர்டு சார்ஜிங்
- பேட்டரி 5,160 mAh அளவாகும்
- Redmi A4 5G மொபைலானது 4 ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் விற்பனை செய்யப்படும்.
- கைப்பேசியில் 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
- ரெட்மி ஏ4 ஆனது தட்டையான விளிம்புகள், வட்டமான மூலைகள் மற்றும் பின்புறத்தில் ஒரு வட்ட கேமரா
- தொகுதியுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, இதில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.
- 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. இதன் மூலம் ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட கேமரா ஃபோனாக இது அமையும் என தகவல் தெரிவிக்கின்றன
இதனுடன் கூடுதலாக, அதன் மேல் விளிம்பில் நிலைநிறுத்தப்பட்ட 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் தொலைபேசி இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. - Also Read: Smartphone Sales: உலகளவில் டாப் 10 மொபைல் விற்பனை லிஸ்ட் இதோ.! ஆதிக்கத்தில் ஐபோன்; டஃப் கொடுத்த சாம்சங்