பிரபல இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய மொபைல் போன் தயாரித்து வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. அந்த மொபைல் போன் மிகவும் குறைந்த விலையில் சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மொபைல் போன் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.

  


இந்நிலையில் இந்த மொபைல் தற்போது கடைகளில் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைல் போனை இனிமேல் கடைகளில் நேரடியாக பெற்று கொள்ள முடியும். இந்த மொபைல் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. இதன் விலை என்ன?


ஜியோ நெக்ஸ்ட் போனின் சிறப்பு அம்சங்கள்:


ரிலையன்ஸ் ஜியோ நெக்ஸ்ட் போனில் கூகுள்  ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உள்ளது. அத்துடன் இந்த மொபைல் போனில் குவால்கம் கியூஎம் 215 தொழில்நுட்பம் உள்ளது. மொபைல் போனில் முழு ஹெச்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 64 பிட் குவாட்கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. பின்னால் இருக்கும் கேமரா 13 மெகா பிக்சல் மற்றும் முன்னால் இருக்கும் கேமரா 8 மெகா பிக்சல் திறன் உடன் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 1080 பிக்சல் தரத்தில் வீடியோவை ரெக்கார்டு செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மொபைல் போனில் ரேமை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் டியோ கோ என்ற செயலியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கூகுள் கேமரா கோ என்ற செயலியின் புதிய வெர்சனும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 




இந்த போனின் விலை என்ன?


இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நெக்ஸ்ட் போனின் விலை 6,999 ரூபாயாக இருந்து வருகிறது. இந்த போனை இஎம்.ஐ மூலமாகவும் மிகவும் குறைவான கட்டணம் செலுத்தி வாங்கலாம். அதாவது நீங்கள் முதலில் 1,999 ரூபாய் மற்றும் சேவை கட்டணமாக 501 ஆகியவற்றை செலுத்தி மொபைல் போனை பெற்று கொள்ளலாம். அதன்பின்னர் மீத தொகையை 24 மாதங்கள் அல்லது 18 மாதங்கள் இ.எம்.ஐ மூலமாக செலுத்தலாம். இந்த மொபைல் போனிற்கான மாத இ.எம்.ஐ 300 ரூபாயாக உள்ளது. தற்போது இந்தப் போன் கடைகளில் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:ஸ்மார்ட் டிவி வாங்கப்போறீங்களா.. இதெல்லாம் கவனத்துல வச்சுக்கோங்க..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண