Redmi A4 5G: 5ஜி தொழில்நுட்பத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் மொபைல்களில் ஒன்றாக Redmi A4 5G இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Redmi A4 5G:



Xiaomi,  Redmi A4 5G மொபைலை, மிகவும் குறைந்த விலையில் 5G தொழில்நுட்பத்துடன் கூடிய போனை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலானது தள்ளுபடியுடன் ரூ. 8,499  விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மொபைலானது இந்தியாவில் நவம்பர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




சிறப்பமசங்கள்:



  • Redmi A4 5G ஆனது HD+ தெளிவு திறனுடன் கூடிய 6.88 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

  • ஸ்கிரீன் ரெஃப்ரஷ் ரேட்: 120 HZ

  • ப்ராசசர்: ஸ்னாப்டிராகன் 4s Gen 2 5G 

  • 18W வயர்டு சார்ஜிங்

  • பேட்டரி 5,160 mAh 

  • Redmi A4 5G  மொபைலானது 4GB ரேம் /6GB ரேம் இணைப்புடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

  • 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

  • ரூ. 1999 மதிப்புள்ள 33W சார்ஜர் இலவச இணைப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • ரெட்மி ஏ4 ஆனது தட்டையான விளிம்புகள், வட்டமான மூலைகள் மற்றும் பின்புறத்தில் ஒரு வட்ட கேமரா
    தொகுதியுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, 





  • கருப்பு மற்றும் ஸ்பார்க்கிஸ் பர்ப்பிள் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் தொலைபேசி இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



Redmi A4, Snapdragon® 4s Gen 2 5G ப்ராசசர் கொண்ட இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஸ்மார்ட்போன் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்த மொபைல் குறித்தான கூடுதல் மற்றும் வாங்க விரும்பினால் , அதிகாரப்புர்வ தளத்திற்குச் சென்று பார்க்கவும். 


Also Read: Smartphone Sales: உலகளவில் டாப் 10 மொபைல் விற்பனை லிஸ்ட் இதோ.! ஆதிக்கத்தில் ஐபோன்; டஃப் கொடுத்த சாம்சங்