பட்ஜெட் மொபைல் பிரியர்களை வெகுவாக கொண்ட  ரெட்மி நிறுவனமானது , இந்தியாவில் அடுத்த மொபைல் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.



Redmi A1 :


“கிளீன் ஆண்டாய்ட் “ அனுபவத்தை கொடுக்கப்போகும் புதிய மொபைல்தான் எங்களின் பிராண்ட் நியூ Redmi A1 என்கிறது ரெட்மி. Redmi A1 வருகிறது செப்டம்பர் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) ரெட்மி நிறுவனம் வெளியிட்டிருந்தது.Redmi A1 ஆனது US Federal Communications Commission (FCC) தரவுத்தளத்திலும், Geekbench தரப்படுத்தல் வலைத்தளத்திலும் காணப்பட்டது. இது US FCC தரவுத்தளத்தில் மாதிரி எண் 220733SL உடன் காணப்பட்டது என்கின்றனர். ரெட்மி தற்போது புதிய மொபைல்போன்களை 'தீபாவளி வித் மி' என்னும் ஹேஷ் டேகில் அறிமுகம் செய்து வருகிறது. புதிய  Redmi A1 அதில் ஒரு அங்கமாக இருக்கிறது.




வசதிகள் :



Redmi A1 ஆனது MediaTek Helio A22 SoC மூலம் இயக்கப்படுகிறது.Redmi A1 ஆனது LED ப்ளாஷ் கொண்ட இரட்டை பின்புற AI கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.இது 5,000mAh பேட்டரியை பேக் செய்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கைபேசியின் பின்புற பேனல் ஸ்கின் அமைப்பு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போன் குறைந்தது மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகமாகலாம். வரவிருக்கும் கைபேசியின் இந்தியாவில் விலை உட்பட மற்ற விவரங்களை Redmi இன்னும் வெளியிடவில்லை. இதன் நீளம் 164.67 மிமீ மற்றும் அகலம் 76.56 மிமீ என கூறப்படுகிறது. தி கீக்பெஞ்ச் ஆனது  இது 3ஜிபி ரேமைக் கொண்டிருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. “clean Android experience” என ரெட்மி குறிப்பிட்டுருப்பதுதான் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மொபைபோனின் பிற வசதிகலை ரெட்மி வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.