போக்கோ எம்5 செப்டம்பர் 5ம் தேதி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, போகோ எம்5எஸ் உடன் இணைந்து, தொலைபேசியின் உத்தேசிக்கப்பட்ட ரெண்டர்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகிய விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன என ஒரு அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. போகோ எம்5 ஸ்மார்ட்போன் படங்களின் மூலம் அவை எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது மூன்று வண்ணத் தேர்வுகளையும் கொண்டிருக்கலாம்.போகோ நிறுவனம் சமீபத்தில் மீடியா டெக் ஹெலியோ ஜி99 எஸ் ஓ சி உடன் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்தது. முந்தைய அறிக்கையின்படி, புதிதாக அறிமுகமாக இருக்கும் இந்த ஃபோன் முழு-எச்டி திறனுடன் 6.58 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.
91மொபைல்ஸ் ரிவியூவின்படி, 64ஜிபி உள்ளடங்கிய ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய Poco M5 மாடல் 189 யூரோவுக்கும் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 15,100) விற்கப்படும். 128ஜிபி ஸ்டோரேஜுடன் கூடிய டாப்-எண்ட் வேரியண்டின் விலை 209 யூரோ (இந்திய மதிப்பில் ரூபாய் 16,700) என கூறப்படுகிறது.
மேலும், Poco M5s மாடல் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதிக்கான விலை 229 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் 18,300) மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதிக்கு 249 யூரோ விலை (இந்திய மதிப்பில் ரூ. 19,900)
Poco M5 மாடல் கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலும் மேலும் Poco M5s மாடல் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் சந்தையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Poco M5 மாடல் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெளியீட்டு நிகழ்வு போகோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும். ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் இந்திய விலையை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.