ரியல்மீ சி33 இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 6ம் தேதி இந்த மாடல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ரியல்மீயிலிருந்து வரவிருக்கும் இந்த புதிய மாடல்  50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபேசியின் மற்ற விவரங்கள் தற்போது தெரியவில்லை. இருப்பினும், ரியல்மீ போனின் அதிகாரப்பூர்வ ரியல்மி இந்தியா இணையதளத்தில் இந்த மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். கடந்த மாதம், இந்த புதிய மாடல் மூன்று வண்ணங்கள் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பத் தேர்வுகளுடன் வரும் என்று கூறப்பட்டது.


அண்மையில்தான் 12000 ரூபாய்க்கும் குறைவான சீன மாடல் போன்கள் இனி இந்தியாவில் விற்கத் தடைவிதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை விற்று வரும் சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது. பலவீனமாக உள்ள உள்நாட்டு சந்தையை மேம்படுத்தும் விதமாக 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை விற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, சியோமி கார்ப் நிறுவனம், பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது.






உலகிலேயே இரண்டாவது மிக பெரிய மொபைல் சந்தையாக இந்தியா திகழ்கிறது. இங்குள்ள குறைந்த விலை மொபைல் சந்தையிலிருந்து பெரும் சீன நிறுவனங்களை வெளியேற்றும் வகையில் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உறுபத்தியாளர்களை ரியல்மி மற்றும் டிரான்சியன் நிறுவனங்கள் குறைத்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்தியாவின் நுழைவு நிலை சந்தையில் இருந்து விலக்கப்படுவது சியோமி உள்பட பல சீன நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்திய ஆண்டுகளில் வளர்ச்சியை அதிகரிக்க இந்நிறுவனங்கள் இந்தியாவையே அதிகளவில் நம்பியுள்ளன. 


அதே நேரத்தில், சீன சந்தையில் தொடர்ச்சியான கரோனா முடக்கத்தால் இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருந்தன. ஜூன் 2022 வரையிலான காலாண்டில், 150 அமெரிக்க டாலர்களுக்கு குறைவாக விற்கபடும் ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியாவின் விற்பனை அளவின் மூன்றில் ஒரு பங்காக உள்ளன. சீன நிறுவனங்கள் அந்த ஏற்றுமதிகளில் 80% வரை உள்ளன என கூறப்படுகிறது.