பட்ஜெட் விலையில் ஸ்மாட்ஃபோன் வாங்கனும்னு எண்ணம் இருப்பவர்களுக்கு ரியல்மி (Realme) சிறந்த தேர்வாக இருக்கும். ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மாட்ர்போன்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. தொடர்ந்து புதுப்புது ஃபோன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய அப்டேட்களை அனைவரும் வாங்கும் வகையில் உள்ள விலையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ரியல்மி களமிறக்கும் மாடல் ரியல்மி C30. C - சீரிஸ் மாடலான இந்த ஸ்மாட்ஃபோன் குறைந்த விலை நிறைய சிறப்பம்சங்களுடன் கிடைப்பது புதிதாக ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ரியல்மி C30 மாடலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Realme C30:
ரியல்மி C30 மாடல் யினிசாக் ப்ராசசர் (Unisoc processor) உடன் ஒரு டெரா பைட் ஸ்டோரேஷ் என மூன்று வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஸ்மாட்ஃபோன் ரெட்மி 10A, Tecno Spark Go, உள்ளிட்ட ஸ்மாட்ஃபோன் மாடலுக்கு போட்டியாக சந்தைக்கு வந்துள்ளாதாக கூறப்படுகிறது.
விலை என்ன?
பயனாளர்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாடல் அறிமுக விலையில் ரூ.7,499-ல் இருந்து கிடைக்கிறது. 2GB RAM வேரியண்ட் விலை இதுதான். 3GB RAM வேரியண்ட் மாடல் 8,999 ரூபாயாகவும் உள்ளது.
என்னென்ன வண்ணங்களில் கிடைக்கும்?
rரியல்மி C30 மாடல் Bamboo Green, Denim Black, and Lake Blue ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.52 இன்ச் அளவுகொண்ட full-HD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, octa-core Unisoc T612 chipset ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 8 மெகா பிக்ஸல் ரியர் கேமரா கொண்டதாகவும், 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கெபாசிட்டியைப் பொறுத்தவரை 5000mAh. நீண்டநேரம் சார்ஜ் வசதி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது உகந்தது. 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, a micro-USB port, and a microSD card slot உள்ளிட்ட பல வசதிகள் இந்த மாடலில் இருக்கிறது.
ரியல்மி C30 வரும் 27 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்