Poco F4 5G, Poco X4 GT ஆகிய இரண்டு ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் சர்வதேச அளவில் வரும் ஜூன் 23 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் அறிமுகத்தை முன்னிட்டு, சமீபத்தில் வெளியான தகவல்கள் இந்த மாடல்களின் விலை, சிறப்பம்சங்கள் முதலானவை கூறப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்ஃபோன்களும் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்குப் போட்டியாக வெளியிடப்படுகின்றன. மேலும், இவற்றுள் Poco F4 5G கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் எனவும் Poco X4 GT மாடல் என்பது Redmi Note 11T Pro மாடலின் மாற்றப்பட்ட வடிவமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


Poco F4 5G மாடல் ஸ்மார்ட்ஃபோனின் விலை 430 யூரோக்கள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 35 ஆயிரம் ரூபாய் ஆகும். Poco X4 GT மாடல் ஸ்மார்ட்ஃபோனின் விலை 400 யூரோக்கள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 33 ஆயிரம் ரூபாய் ஆகும். 


இந்த இரண்டு மாடல்களும் சர்வதேச அளவில் வரும் ஜூன் 23 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்த வெளியீட்டை இந்தியாவில் இருந்து போகோ நிறுவனத்தின் யூட்யூப் சேனலில் ஜூன் 23 அன்று மாலை 5.30 மணிக்குக் காணலாம். 



கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட Redmi Note 11T Pro ஸ்மார்ட்ஃபோனின் மாற்றப்பட்ட வடிவமாக Poco X4 GT 5G உருவாக்கப்பட்டுள்ளது. 


Poco F4 5G மாடல் இரண்டு சிம் கார்ட் செலுத்தும் வசதி கொண்டது. மேலும், போகோ நிறுவனத்தின் இண்டெர்ஃபேஸ் கொண்டு செயல்படும் இந்த மாடலில் ஆண்ட்ராய்ட் 12 சேர்க்கப்பட்டுள்ளது. இது 6.67 இன்ச் AMOLED full-HD+ டிஸ்ப்ளே வசதி கொண்டது. இதில் Corning Gorilla Glass 5 பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 8GB RAM, Snapdragon 870 SoC பிராசஸர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 


Poco F4 5G மாடலில் 64 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளதுடன், F/1.79 aperture லென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. அதன் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த மாடலில் ஸ்டோரேஜ் வசதியாக 256GB இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மற்றொரு வேரியண்டாக 12GB RAM, 256GB ஆகிய வசதி கொண்ட மாடலும் வெளியிடப்படும் என போகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடலில் 4500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 



Poco X4 GT மாடல் என்பது Redmi Note 11T Pro மாடலின் மாற்றப்பட்ட வடிவம் என்பதால் இரண்டிலும் ஒரே மாதிரியிலான சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் மூலமாக செயல்படும் MIUI 13 ஓ.எஸ், 6.6 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் இதில் octa-core MediaTek Dimensity 8100 SoC, 8GB RAM ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 


மேலும், இந்த மாடலின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டு அவை 64 மெகாபிக்சல் அளவிலான Samsung ISOCELL GW1 சென்சார் மூலமாக இயங்குகின்றன. இந்த மாடலில் 512GB ஸ்டோரேஜ் வசதியும், 5080mAh பேட்டரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன.