பட்ஜெட் மொபைல்போன் நிறுவனமான ரெட்மி விரைவில் தனது அடுத்த மிட் ரேஞ்ச் மொபைபோனை சந்தைப்படுத்தவுள்ளது . இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வருகிற  செப்டம்பர் 6 ஆம் தேதி Redmi 11 Prime 5G ஐ அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Redmi 11 Prime 5G இந்தியாவில் தயாரிக்கப்படும் கேட்ஜெட்ஸின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







Redmi 11 Prime 5G மொபைல்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :


Redmi 11 Prime 5G ஆனது இந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 
Redmi 11 Prime 5G  வசதிகளானது Redmi Note 11E 5G ஐ ஒத்த வசதிகளை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.வரவிருக்கும் 11 Prime 5G ஆனது MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 6.58 இன்ச் முழு HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறலாம் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும். து 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத் திறனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளீட்டு நினைவகத்தை பொறுத்தவரையில் நிச்சயம் Redmi 11 Prime 5G ஆனது மற்றொரு மாறுபாட்டையும் கொண்டிருக்கும் ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கேமராவை பொறுத்த வரையில் 50MP டூயல் ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க ஷூட்டர் இடம்பெறும் என கூறப்படுகிறது.5,000mAh பேட்டரி மூலம்  இயங்கும் Redmi 11 Prime 5G  இல்  18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இருக்கும்.




இலவசமாக வெல்ல வாய்ப்பு :



 Redmi Note 11E 5G ஆனது இன்றுமுதல் ₹12,499 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. Redmi 11 Prime 5G  மொபைலின் விலையை பொறுத்தவரையில் இது 20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வரலாம் . ஆனால் உண்மையில் இதன் நிர்ணயிக்கப்பட்ட விலையை அறிந்துக்கொள்ள வேண்டுமானால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் . Redmi 11 Prime 5G மொபைலை இலவசமாக பெற்றுக்கொள்ள ரெட்மி தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் போட்டி ஒன்றை நடத்துகிறது. அதில் வெல்லும் பயனாளர்களுக்கு இலவசமாக அறிமுகமாகவுள்ள புதிய மொபைலை ரெட்மி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சந்தையில் 7 மில்லியனுக்கும் அதிகமான 5G ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது.