பிரபல OPPO நிறுவனம் தனது பயனாளர்களுக்கு F சீரிஸ் வரிசையில் அடுத்தடுத்த இரண்டு பட்ஜெட் மொபைல்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. இன்று மாலை 5 மணி முதல்  மொபைல்போன் அறிமுக நிகழ்ச்சியானது யூடியூப் , ட்விட்டர் போன்ற சமூக வாலைத்தளங்களில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. நிகழ்வில்   Oppo F21 Pro மற்றும் F21 Pro 5G ஆகிய  இரண்டு மொபைல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் நேரடி காட்சிகளை கீழே காணலாம்.


 



அறிமுகமாகவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக வெளியான  Oppo F21 Pro மற்றும் F21 Pro 5G  ஆகியம் மொபைல்போன்களின் அடிப்படை  வசதிகள் :


ஃபோன்கள் இரண்டுமே 6.43-இன்ச் முழு-HD மற்றும் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் 4G மாறுபாடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. Oppo கைபேசியின் 5G பதிப்பில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது.






புகைப்படம் எடுப்பதற்காக, Oppo F21 Pro மற்றும் Oppo F21 Pro 5G இரண்டும் 64-மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்களைக் கொண்டுள்ளது.  64-மெகாபிக்சல் முதன்மை சென்சார்களை கொண்டிருக்கிறது. அதே போல 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவையும் பின்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு  பயன்படுத்தப்படும் முன்பக்க கேமராவானது  32 மெகாபிக்சல் திறனை கொண்டிருக்கிறது. இரண்டு வேரியண்டுமே 4,500mAh பேட்டரிகளை 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பேக் செய்வதாகக் கூறப்படுகிறது. Oppo F21 Pro 8GB + 128GB ஆனது  27,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பித்தல் திறன் மற்றும் 680 SoC  ஸ்னாப்டிராகன் வசதியுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.