ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளைப் பற்றி பேசுகையில், ஒன்பிளஸ் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பிரீமியம் பிராண்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நார்ட் 2டி குறித்து சில நாட்களாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த மொபைல் குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நாளை (மே 19)  இந்த மொபைல் வெளியாக இருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் லீக் ஆகி உள்ளன. 


OnePlus Nord 2T ஆனது 90Hz ரெஃப்ரஷிங் ரேட், 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் MediaTek Dimensity 1300 சிப்செட் ஆகியவற்றுடன், AMOLED திரையைக் கொண்ட ஒரு மிட்-ரேஞ்ச் மொபைலாக இருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல்கள் லீக் ஆனதில் இருந்து OnePlus Nord 2T ஐ மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ஒன் ப்ளஸ் விரும்பிகள்.



இந்த போனின் வெளித்தோற்றம் OnePlus Nord CE 2 Lite போன்று உள்ளது. ஆனால் அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல இல்லை. உதாரணமாக, கேமராக்களுக்கு இரண்டு பெரிய கட்அவுட்கள் இருக்கின்றன, ​​​​கீழே இரண்டு சென்சார்கள் உள்ளன. ஒவ்வொரு கட்அவுட்டிலும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. மேலும் அனைத்தும் ஒரு செவ்வக கட்டத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன. இடதுபுறம் வைக்கப்பட்ட பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன் வருகிறது. OnePlus சமீபத்தில் வெளியிட்ட மொபைல் கட்டமைப்பில் இருந்து பெரிதாக வேறுபட்டதல்ல, ஆனால் அது குறையும் இல்லை, நன்றாகவே பொருந்தி இருக்கிறது.



அறிக்கையின்படி, OnePlus Nord 2T ஆனது 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வருகிறது. ஸ்க்ரீனிலேயே கைரேகை சென்சார் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள பஞ்ச்-ஹோல் கேமரா, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக, 32 மெகாபிக்சல் சோனி IMX 615 சென்சார் பொறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. OnePlus Nord 2Tயின் பின்புறத்தில், பிரதான கேமராவின் உள்ளே ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 8-மெகாபிக்சல் Sony IMX 355 சென்சார், 120 டிகிரி வைட் உடன் கூடிய 50-மெகாபிக்சல் Sony IMX 766 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



இந்த மொபைல் MediaTek Dimensity 1300 செயலியுடன் வெளியாகவுள்ள உலகின் முதல் மொபைலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Dimensity 1200க்கு அடுத்ததாக இந்த சிப்செட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபோன் 8GB/128GB மற்றும் 12GB/256GB RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன், 4500mAh பேட்டரியுடன் வரலாம். OnePlus Nord 2T இல் WiFi 6, Bluetooth 5.2, NFC மற்றும் 5G ஆகியவை இடம்பெறலாம். இதன் விலை EUR 399 இல் தொடங்கலாம், அதாவது தோராயமாக ரூ.32,600. OnePlus Nord 2T இன் இந்திய விலை குறிப்பிடப்படவில்லை, ஆனால் இது மேலே உள்ள யூகத்தை விட குறைவாக இருக்கும். அந்த யூகத்திற்கு நாம் OnePlus Nord CE 2 Lite இன் உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். OnePlus ஆனது Nord CE 2 Lite ஐ ஐரோப்பாவில் EUR 299 (சுமார் ரூ. 24,400) ஆனால், இந்தியாவில் ரூ.19,999 விலையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.