கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிக்சல் மொபைலின் அடுத்த சீரிஸ் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது.  பிக்சல் மொபைல்ஃபோனின் அடுத்த பதிப்பான  Pixel 6a  மொபைல் போன் ,  I/O 2022 நுகர்வோர் நிகழ்வில் அறிமுகமானது . இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் டென்சர் செயலியுடன் வருவதால்தான் இது அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மொபைல் போனில் இருக்கும் வசதிகள் மற்றும் இது எப்போது வெளியாகிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது . அதனை பார்க்கலாம்.







Google Pixel 6a வசதிகள் :


கூகுள் பிக்சல் 6a ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு செயல்படுகிறது. 6.1-இன்ச் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவை 20:9 விகிதத்துடன்  கொண்டிருக்கிறது.  கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.மேலும் ஆக்டா-கோர் கூகுள் டென்சர் SoC மூலம் இயக்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டருடன் 12.2 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Pixel 6a ஆனது முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதிகளை கொண்டுள்ளது.Google Pixel 6a ஆனது 128Gb  உள்ளீட்டு நினைவகத்தை கொண்டுள்ளது.  மேலும் 5G, Wi-Fi 6E மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய பல வசதிகளுடன் வருகிறது. தொலைபேசியில் 4G LTE மற்றும் புளூடூத் v5.2  வசதிகளும் உள்ளது.






விலை மற்றும் வெளியீடு :


Google Pixel 6a  ஆனது வருகிற ஜூலை மாதம் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தோராயமாக 40,000 ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  மேலும் Flipkart வர்த்தக செயலி வாயிலாக இந்த மொபைல்ஃபோனை முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம் . மூன்று நிறங்களில் (பிளாக், ஒயிட்,கிரீன் ) இது கிடைக்கிறது