மோட்டோரோலா நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் போன் அறிமுகம்-Motorola G45 5G


மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பல்வேறு தரமான அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் நிறுவனத்தின் போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் மோட்டோரோலா அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கு சமீப களமாக நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா Motorola G45 5G போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

Continues below advertisement


மோட்டோரோலா G45 5G என்பது இந்தியாவில் ₹10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதன் சிறந்த வடிவமைப்பு, திறமையான செயல்திறன் மற்றும் நீண்ட battery life ஆகியவை இதனை போட்டி விலையுள்ள சந்தையில் முன்னணி சாதனமாக்குகின்றன.


அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா Motorola G45 5G போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் Cash back சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.


Motorola G45 5G Specifications :


Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன். 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே உடன் மோட்டோரோலா ஜி45 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது.1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.


அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போன். மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் மோட்டோரோலா ஜி45 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.


இந்த மோட்டோரோலா ஜி45 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology)மற்றும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.


18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி45 5ஜி போன். IP52 ஃஸ்ளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த போன். இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.


3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன.


4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மோட்டோரோலா ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. வேகன் லெதர் பேக் பேனல் டிசைனில் பிரில்லியன்ட் ப்ளூ (Brilliant Blue), பிரில்லியன்ட் கிரீன் (Brilliant Green) மற்றும் விவா மெஜந்தா (Viva Magenta) ஆகிய நிறங்களில் இந்த மோட்டோரோலா போன் வாங்க கிடைக்கும்.


குறைந்த விலையில் 5G அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்


மோட்டோரோலா G45 5G, அதன் விலை வரம்பில், ஒரு சிறந்த 5G ஸ்மார்ட்போனாகும். அதன் அழகான வடிவமைப்பு, திறமையான செயல்திறன் மற்றும் நீண்ட battery life ஆகியவை இதனை போட்டி விலையுள்ள சந்தையில் முன்னணி சாதனமாக்குகின்றன. எனவே, குறைந்த விலையில் 5G அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.


குறிப்பு: வாடிக்கையாளர்கள் செல்போன் வாங்கும்போது அதன் அடிப்படை வசதிகளை நீங்கள் ஆராய்ந்து பெற்றுகொல்லுங்கள். பொறுப்பு உங்களுடையது.