iPhone 16 Flipkart Discount: ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் மாடலான 16-ல், அதிரடியாக 9,901 ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளது ஃப்லிப்கார்ட் நிறுவனம். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

ஐஃபோன் 16-ல் ரூ.9,901 அதிரடி தள்ளுபடி அளித்துள்ள ஃப்லிப்கார்ட்

ஆப்பிளின் ஐஃபோன் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது அதன் ஐஃபோன் 16 மாடல். இந்த மாடல் ஃப்லிப்கார்ட்டில் 79,900 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், தற்போது ஐஃபோன் 16 (128GB, Black) மாடலின் விலையில் 9,901 ரூபாய் தள்ளுபடியை அளித்துள்ளது ஃப்லிப்கார்ட் நிறுவனம்.

அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்த புதிய டீலின் படி, மேலே குறிப்பிட்டுள்ள ஐஃபோன் 16 மாடல் ஃபோனை 69,999 ரூபாய்க்கு வாங்கலாம். இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும், எக்ஸ்சேஞ்சோ, வங்கி ஆஃபரோ தேவையில்லை எனவும் ஃப்லிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

ஆனால், இந்த ஆஃபர், ஐஃபோன் 16-ல் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கருப்பு வண்ண ஃபோனிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. எனினும், பழைய ஃபோனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஃபோனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஃபோனின் தரத்தை பொறுத்து, எக்ஸ்சேஞ்ச் சலுகையாக 45,150 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இது இல்லாமல், ஆக்சிஸ் வங்கி யூபிஐ பயன்படுத்தி SuperMoney வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு 500 ரூபாய் வரை கேஷ் பேக் ஆஃபரும், ஃப்லிப்கர்ட் ஆக்சிஸ் வங்கி கிரேடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஃபோன் 16-ன் சிறப்பம்சங்கள் என்ன.?

மேம்படுத்தப்பட்ட கேமரா:

  • ஐஃபோன் 16, 48MP மெயின் சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 2 கேமராக்களுடன் வருகிறது, இது பிரமிக்க வைக்கும் அளவிலான புகைப்பட தரத்தை வழங்குகிறது. 
  • இது 4K ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு, சினிமா பயன்முறையை வழங்குகிறது.
  • மேம்பட்ட கேமரா கண்ட்ரோல் பட்டன், கேமரா அமைப்புகளுக்கு விரைவான அணுகுமுறையை வழங்குகிறது.

டிஸ்ப்ளே

  • HDR சப்போர்ட்டுடன் கூடிய 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
  • இது 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகிறது.

ப்ராசஸர்

  • 6 கோர் சிபியு உடன் A18 சிப், 5 கோர் ஜிபியு, 16 கோர் நியூரல் எஞ்சினுடன் வருகிறது.

பேட்டரி

  • 22 மணி நேரம் வீடியோ பார்க்கும் அளவிலும், 25 வாட் Fast சார்ஜிங் மற்றும் MagSafe வொயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது.

டிசைன்

  • IP68 வாட்டர் ரெஸிஸ்டன்ட் மற்றும் தூசி பாதுகாப்புடன், கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ஐஃபோன் 16 கிடைக்கும்.

கனெக்டிவிட்டி

  • வைஃபை 7, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி சி போர்ட் மற்றும் 5ஜி சப்போர்ட்டுடன் வருகிறது.

இது இல்லாமல், ஒரு ஆக்ஷன் பட்டன் மற்றும் பல்வேறு செயல்பாடுகளுடன் கூடிய கேமரா கன்ட்ரோல் பட்டனும் ஐஃபோன் 16-ல் உள்ளன.