ரிலையன்ஸ் ஜியோ இன்று 'ஜியோ பாரத்' என்ற புதிய இணைய வசதி கொண்ட மொபைலை வெளியிட்டது. ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதும் இன்னும் பட்டன் போன்களைப் பயன்படுத்தும் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
ஜியோ பாரத் ஃபோன்
தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் அவர்களின் சேவைகளின் விலையை அதிகரித்தும் களத்தில் நிற்க முடியாமல் போராடும் நேரத்தில், ஜியோவின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. ஜூலை 7 முதல் 6,5000 தாலுகாக்களில் 1 மில்லியன் ஜியோ பாரத் ஃபோன்களுக்கான பீட்டா சோதனையைத் தொடங்குவதாக ஜியோ கூறுகிறது. ஜியோ பாரத் போன்களில் JioPay மூலம் UPI கட்டணங்களை செய்யலாம். இதோடு JioCinema மற்றும் JioSaavn வசதிகளும் கிடைக்கும். இந்த ஃபோனுடன் கேமரா வசதியும் வருகிறது, ஆனால் ஜியோ இன்னும் அதைப் பற்றிய விவரங்களைப் பகிரவில்லை.
விலை மற்றும் ரீசார்ஜ்
ஜியோ பாரத் போன் இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியிடப்பட உள்ளது. 4ஜி ஸ்மார்ட் ஃபீச்சர் போன் சிவப்பு மற்றும் நீலம் என இரண்டு வண்ணங்களில் வருகிறது. ரூ.123-க்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால், மற்றும் 500 எம்பி மொபைல் டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதே திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.1,234 ஆகும்.
எப்போது வெளியீடு
முதல் 1 மில்லியன் ஜியோ பாரத் போன்களுக்கான பீட்டா சோதனை ஜூலை 7, 2023 முதல் தொடங்கும் என்று தெரிகிறது. ஜியோ இந்த தொலைபேசியின் விவரக்குறிப்புகளை இன்னும் வெளியிடவில்லை, ஆனால் சில முக்கிய அம்சங்களை அதனுடன் அறிவித்துள்ளது. இதில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஜியோ சினிமா ஆப் மூலம் பார்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்
இதிலுள்ள JioSaavn செயலியின் மூலம், 8 கோடி பாடல்களை கேட்கும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. ஜியோ பாரத் ஃபோனில் FM ரேடியோ மற்றும் டார்ச்லைட் போன்ற பிற அடிப்படை அம்சங்களும் உள்ளன. ஃபோன் எந்த OS இல் இயங்குகிறது என்பதை ஜியோ வெளியிடவில்லை, எனவே WhatsApp போன்ற பிற பயன்பாடுகளை அதில் பதிவிறக்கம் செய்ய முடியுமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை.