சீனாவை சேர்ந்த ஐகூ நிறுவனம் அடுத்துவரும் சில வாரங்களில்,  இரண்டு புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியா, சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இந்த செல்போன்கள் முதலில் அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், முதலாவதாக மலேசியாவில் ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அப்போது, ஐகூ 11 5ஜி மற்றும் ஐகூ 11 5ஜி ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் செல்போனின் பின்புற பேனல் வெள்ளை நிறத்துடனும், 3 செங்குத்து கோடுகளையும் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.




ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன்


ஐகூ 11 5ஜி சிறப்பம்சங்கள்


இரண்டு சிம்கள் பயன்படுத்தப்படக்கூடிய  இந்த செல்போனில், 6.78 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் வளைந்த E6 AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் உடன், டைப்-சி சார்ஜிங் அம்சத்துடன், அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் திறன் கொண்ட5000 mAh பேட்டரியும் இடம்பெற்றுள்ளது. 8 மற்றும் 12ஜிபி ரேம் வகையிலும், 256 மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட மாடல்களிலும் ஐகூ 11 5ஜி செல்போன்கள் சந்தைக்கு வர உள்ளன. 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் 13MP அல்ட்ரா வைடு கேமரா 8MP மேக்ரோ கேமரா உடன், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Origin OS 3 உடன் அறிமுகமாக உள்ள புதிய ஸ்மார்ட்போனில், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஹை-ஃபை ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை 6 ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி என அடுக்கடுக்கான அடுத்த தலைமுறை அம்சங்களும், இடம்பெற்றுள்ளன.  205 கிராம் எடையில் இரண்டு வண்ணங்களில் முதற்கட்டமாக இந்த செல்போன் மலேசியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐகூ 11 5ஜி செல்போன் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.