முதற்கட்டமாக சென்னை உள்பட எட்டு முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கத் தொடங்கியது.
5ஜி சேவைகள் :
ஸ்மார்ட்ஃபோன் யூசர்கள் பலரும் ஏற்கெனவே 5ஜி போன்களைக் கொண்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் தற்போது 5G மென்பொருளுக்கான அப்டேட்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் உண்மையான 5 ஜி சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பிற என்.சி.ஆர். பகுதிகளில் 5 ஜி சேவையை வழங்கி வருவதாக ஜியோ தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட அதி வேகம் கொண்ட உண்மையான 5ஜி சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. பீட்டா வெர்ஷன் மூலம் மட்டுமே தற்போது 5ஜி சேவை வழங்கப்பட்டு வருவதால் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே அந்த சேவை கிடைத்து வருகிறது.
ஜியோ ஆஃபர் :
வரவிருக்கும் நாட்களில் டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில், இன்னும் நிறைய ஜியோ பயனர்களுக்கு ஜியோ வெல்கம் ஆஃபர் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதனால், கூடுதல் கட்டணமின்றி 1 Gbps+ வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க முடியும்.
இதுகுறித்து ஜியோ செய்திதொடர்பாளர் கூறுகையில், "டெல்லி மற்றும் என்.சி.ஆர். பெரும்பாலான பகுதியில் சேவை வழங்குவது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம். ஜியோ தனது True-5G வரம்பை விரைவான வேகத்தில் விரிவுபடுத்துகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் திட்டமிடப்பட்ட True-5G நெட்வொர்க்கின் பெரும்பகுதியை உருவாக்கியுள்ளது.
டெல்லி-என்.சி.ஆர். பகுதி முழுவதும் True-5G சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டர் ஜியோவாகும். ஒவ்வொரு இந்தியருக்கும் True5G-ஐ வழங்க ஜியோ பொறியாளர்கள் 24 மணி நேரமும் உழைக்கக் காரணம், இந்தத் தொழில்நுட்பத்தின் மாற்றும் சக்தி மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அது வழங்கக்கூடிய அதிவேகப் பலன்கள்தான்" என்றார்.
ஜியோ பயனர்கள் :
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஜியோ பயனர்கள் ஏற்கனவே ஜியோ வெல்கம் ஆஃபரை அனுபவித்து வருகின்றனர், இதில், அவர்கள் 1 Gbps+ வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் அனுபவிக்கிறார்கள் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதன் நெட்வொர்க் அனைத்து முக்கிய இடங்கள் மற்றும் பகுதிகளிலும் வழங்கப்படும் என ஜியோ உறுதி அளித்துள்ளது.
• பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள்
• மருத்துவமனைகள்
• பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
• அரசு கட்டிடங்கள்
• தெருக்கள்
• மால்கள் & சந்தைகள்
• சுற்றுலா தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள்
• தொழில்நுட்ப பூங்காக்கள்
• சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநகரங்கள்