Google Pixel 9 series: கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள், வரும் 13ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்:


கூகுள் நிறுவனம் சார்பில் வெளியாக உள்ள, முதன்மையான ஸ்மார்ஃபோன் மாடலான பிக்சல் 9 சீரிஸ் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த்யுள்ளது. வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு,  நிறுவனத்தின் மேட் பை கூகுள் நிகழ்வில் அந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் வெளியிடப்பட உள்ளது. அதன்படி,  இந்த ஆண்டு நிகழ்வில் 4 புதிய பிக்சல் ஸ்மாட்ஃபோன் எடிஷன்கள் தயார் நிலையில் உள்ளன. அவை Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold ஆகும். செப்டம்பரில் புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட உள்ள சூழலில்,  அதற்கு முன்னதாகவே கூகுள் தனது பிக்சல் வெளியீட்டு நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


பிக்சல் 9 உத்தேச விலை & விவரக்குறிப்புகள்:


பிக்சல் 9 ஆனது 6.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும், கருப்பு, வெளிர் சாம்பல், பீங்கான் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோன் அதன் முன்னோடி கேமரா அமைப்பைப் போலவே இருக்கும் மற்றும் பளபளப்பான கண்ணாடி வெளிப்புறத்தைக் கொண்டிருக்கும். புதிய டென்சர் ஜி4 சிப்செட், 12ஜிபி வரை ரேம் உடன் வரக்கூடியது. பிக்சல் 9 விலை ஐரோப்பாவில் 899 யூரோக்கள் ஆகவும், அமெரிக்காவில் 599 முதல் 799 டாலர்கள் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிக்சல் 9 Pro & பிக்சல் 9 Pro XL விலை & விவரக்குறிப்புகள்:


Pixel 9 Pro மற்றும் Pixel 9 Pro XL ஆனது டென்சர் G4 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 16GB RAM உடன் வர வாய்ப்புள்ளது. ப்ரோ மாடல் 4,558mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் Pixel 9 Pro XL 4,942mAh பேட்டரியுடன் வர வாய்ப்புள்ளது. பிக்சல் 9 ப்ரோ 128ஜிபி எடிஷனின்  விலை 1,099 யூரோக்கள் ஆகவும், 256ஜிபி எடிஷன் விலை 1,199 யூரோக்கள் ஆகவும், 512ஜிபி எடிஷன் விலை 1,329 யூரோக்கள் ஆகவும் இருக்கலாம்.


பிக்சல் 9 Pro ஃபோல்ட் விலை & விவரக்குறிப்புகள்:


பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் 6.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 8 இன்ச் இன்னர் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பிக்சல் ஃபோல்டின் தொடர்ச்சியாக வரும் புதிய மாடல், 48எம்பி ப்ரைமரி, 10.5எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் 10.8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் உட்பட பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, முன்புறத்தில் 10எம்பி ஷூட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கூகுள் ஃபோல்ட் விலையானது முறையே, 256ஜிபி மற்றும் 512ஜிபி வகைகளுக்கு 1,899 மற்றும் 2,029 யூரோக்கள் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.