வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான இறக்குமதி வரியை 20-15 சதவீதத்திலிருந்து குறைக்கும் முடிவை அரசாங்கம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ஆப்பிள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் அதன் ஐபோன் வரிசையில் விலைக் குறைப்புகளை அமல்படுத்தியுள்ளது.
இறக்குமதி வரி குறைப்பு:
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான இறக்குமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ஆப்பிள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் அதன் ஐபோன் வரிசையில் விலைக் குறைப்புகளை அமல்படுத்தியது. ஐபோன் மாடலுக்கு ஏற்ப விலைக் குறைப்பு மாறுபடுகிறது.
ஐ- போன் விலை குறைப்பு:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட iPhone 13, iPhone 14 மற்றும் iPhone 15 ஆகியவை சுமார் ரூ. 300 ($3.6) வரை குறைந்துள்ளது. இருப்பினும், ஐபோன் எஸ்இ விலை ரூ. 2,300 ($27.5) குறைந்துள்ள நிலையில், மற்ற ஐபோன் மாடல்களுக்கு கணிசமான விலைக் குறைப்புக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சூப்பர் பிரீமியம் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகியவை ரூ.6,000 ($72) வரை மிகப்பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் ஐ-போன்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் ஐ-போன் மோகம்:
CIRP சமீபத்திய தரவு ஸ்மார்ட்போன் சந்தை தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான போக்கை வெளிப்படுத்துகிறது, அதில் ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆப்பிள் ஐபோனுக்கு மாறுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காட்டுகிறது. ஜூன் காலாண்டில், புதிய ஐபோன் வாங்குபவர்களில் ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 17 சதவீதம் பேர் முன்னாள் ஆண்ட்ராய்டு பயனர்களாக இருந்தனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 10 சதவீதமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரி விதிப்பு முறை:
இந்தியாவில், ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்படுகிறதா அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதைப் பொறுத்து அவற்றின் வரி அமைப்பு மாறுபடும். தற்போது, இறக்குமதி செய்யப்படும் சாதனங்களுக்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் 22 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. கூடுதலாக ( surcharge ), அடிப்படை சுங்க வரியில் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் உள்ளது.
சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பு இந்த கட்டமைப்பில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான அடிப்படை சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படும், அதே நேரத்தில் கூடுதல் கட்டணம் ( surcharge ) இந்த புதிய விகிதத்தில் 10 சதவீதமாக இருக்கும்.
இதன் விளைவாக, மொத்த சுங்க வரி ( custom duty ) 16.5 சதவீதமாகக் குறையும், இதில் 15 சதவீத அடிப்படை வரி மற்றும் 1.5 சதவீத கூடுதல் கட்டணமும் அடங்கும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு, வரிச்சுமை கணிசமாகக் குறைவாக உள்ளது, 18 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே பொருந்தும்.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிறுவனம் அதன் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது, இந்திய சந்தையில் விற்பனையாகும் ஐபோன்களில் 99 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. உயர்நிலை ஐபோன் மாடல்களின் சிறிய தேர்வு மட்டுமே தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது.