கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் வரிசையின் சில தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் தங்கள் பிராண்ட் ஸ்மார்ட்போன்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்வதற்கான லட்சியங்களுடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டது.


இந்தியாவில் கூகுள் பிக்சல்ஃபோன்கள்


ஆண்ட்ராய்டு தயாரிப்பாளர் பிக்சல் ஸ்மார்ட்போனின் 5 லட்சம் முதல் 10 லட்சம் யூனிட்களை அசெம்பிள் செய்ய உற்பத்தியாளர்களிடம் ஏலம் கோரியுள்ளனர் என்று தி இன்ஃபர்மேஷன் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட ஏலமானது பிக்சலின் வருடாந்திர உற்பத்தியில் 10-20% ஆகும் என்றும் அறிக்கை மேலும் கூறியது. கூகுள் இத்திட்டத்தை முன்னோக்கி செயல்படுத்தினால், பல வியாபாரங்கள் கொண்ட கூகுள் நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் பெரிய கவனம் செலுத்தப்போவதற்கான குறியீடாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். இது நாட்டில் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை மேம்படுத்த நிறுவனத்திற்கு உதவும், நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக மாறும் என்றும் இதற்காக வரும் ஆண்டுகளில் $10 பில்லியன் செலவழிக்க உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிகிறது.



அதிக விலை


கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தனது போனின் முதன்மை பதிப்புகளை வெளியிடுவதை Google தவிர்த்து வந்துள்ளது. அதற்கு பதிலாக இடைப்பட்ட ஏ-சீரிஸ் வரிசையுடன் வந்தது. ஏனெனில் இந்திய சந்தையில் பட்ஜெட் போன்கள்தான் வியாபாரம் பெரிதாக ஆகிறது. ஃபிளாக்ஷிப் என்றாலும் அதிலும் குறைந்த விலை கொடுபவர்களுக்கே அதிக மவுசு.


தொடர்புடைய செய்திகள்: அன்று தோனி ரோகித்திற்கு செய்ததை இன்று ரோகித் பண்டிற்கு செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபரின் வைரல் ட்வீட்


உள்நாட்டில் தயாரிப்பதன் நோக்கம்


கூகுள் தொலைபேசிகளை உள்நாட்டில் தயாரிப்பதன் மூலம், தனது ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது விதிக்கப்படும் அதிக இறக்குமதி வரியைத் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்நாட்டில் வன்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் பலவிதமான சலுகைகளையும் வழங்குகிறது. அதன் மூலமாக பார்த்தால் கூகுள் ஃபிளாக்ஷிப் மொபைல் போன்கள் குறைந்த விலையில் கொடுக்க முடியும். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது கூகுள்.



இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளர்கள்


Apple-ஐப்போலவே, கூகுளும் அதன் சில உற்பத்தி முயற்சிகளை சீனாவிற்கு வெளியே நகர்த்தி வருகிறது. கூகுள் சில பிக்சல் உற்பத்தியை வியட்நாமிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக Nikkei Asia தெரிவித்துள்ளது. கூகிளின் போட்டியாளரான ஆப்பிள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது மற்றும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாட்டில் ஐபோன் 14 வரிசையை உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi, Samsung, Oppo மற்றும் Vivo - இந்தியாவில் தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் ஃபோன் தயாரிப்பாளர்கள் பல ஆண்டுகளாக நாட்டில் ஸ்மார்ட்போன் வரிசைகள் மற்றும் பல கேஜெட்களை உள்நாட்டில் தயாரித்து வருகின்றனர். ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 120 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் அலகுகள் விற்பனைக்கு வருகின்றன, மேலும் நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவல் தளம் 600 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்