இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முதலில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி அடுத்த வாரம் தொடங்க உள்ளது. 


 


இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்த இரண்டு டி20 தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்திய பேட்டிங் ஆர்டர் தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். 


 






அதில், “டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். அதற்கு முதலில் ரோகித் சர்மா நம்பர் 4 இடத்தில் களமிறங்க வேண்டும். 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக தோனி ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க தொடங்கினார். அதன்பின்னர் அது ஒரு பெரிய வரலாற்று சம்பவமாக மாறியது. அதேபோல் தற்போது ரோகித் சர்மா பண்ட் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், விராட் கோலி,ரோகித் சர்மா,சூர்யகுமார் யாதவ் முதல் 5 இடங்களில் களமிறங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்:


செப்டம்பர் 20- முதல் டி20 போட்டி


செப்டம்பர் 23- இரண்டாவது டி20 போட்டி


செப்டம்பர் 25- மூன்றாவது டி20 போட்டி


இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:


செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி


அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி


அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி


அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.


தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.