Best Phones Under Rs 30000: 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் பிரீமியம் ஸ்மார்ட் போன்களில், தரமான 5 மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஸ்மார்ட் ஃபோன்கள்:


30 ஆயிரம் ரூபாய் என்பது ஸ்மார்ட் ஃபோன்களின் அடிப்படை மாடல்களின் பயன்பாட்டிலிருந்து, ப்ரீமியம் மாடலின் தொடக்க நிலை மாடல்களின் பயன்பாட்டிற்கு செல்வதற்கான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் செல்ஃபோன்கள் பிரீமியம் மாடலில் கிடைக்கும் தனித்துவம் வாய்ந்த அம்சங்களையும், சிறந்த செயல்திறனையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.


கொடுத்த பணத்திற்கேற்ற அனுபவத்தையும் பயனாளர்கள் பெறமுடியும். எனவே, நீங்கள் ஃபோன் வாங்க விரும்பினால், 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் என்றால்,  இதோ உங்களுக்கான ஐந்து பிரீமியம்-மிட் செக்மென்ட் ஸ்மார்ட் ஃபோன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Poco F5:


Poco நிறுவனம் சிறந்த அம்சங்களை கொண்ட சாதனங்களை வழங்குவதோடு,  பட்ஜெட் மற்றும் மிட்-செக்மென்ட் ஃபோன்களை வழங்குவதிலும் முதலிடம் வகிக்கிறது.  அதற்கு Poco F5 ஒரு உதாரணம். இது மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 7 Gen 2 சிப் உடன் வருகிறது. அதோடு, 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. தொலைபேசி 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் விலை 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


iQoo Neo 7:


iQoo Neo 7 பல பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது. 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே FHD+ தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃரஷ் ரேட், OIS உடன் மிகச் சிறந்த 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.


சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்பில், இயங்கும் திறன் கொண்டது.  தனித்துவமான ஸ்கொயர் கேமரா யூனிட்டுடன் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது. பின்புறத்தில் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. இதன் விலை 29 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Nothing Phone (1):


இந்த மாடல் அறிமுகமாகி ஒருவருடம் பழமையானதாக இருந்தாலும், சிறப்பம்சங்களில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இன்றளவும் தனித்து விளங்குகிறது நத்திங் ஃபோன் 1.   Qualcomm Snapdragon 778G+ சிப் மற்றும் 6.55 இன்ச் FHD+ AMOLED தொடுதிரையுடன் வருகிறது. பின்புறத்தில் இரட்டை 50 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. நல்ல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் 4500 mAh பேட்டரி இந்தப் பட்டியலில் மிகச் சிறியது மற்றும் 33W வயர்டு சார்ஜிங் வேகம் மிகக் குறைவானது. இதன் தொடக்க விலை 29 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Redmi Note 12 Pro Plus:


30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த கேமரா வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட் ஃபோனை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான சரியான ஆப்ஷன் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் தான். காரணம் இதன் மெயின் கேமரா 200 மெகா பிக்சல் லென்ஸை கொண்டுள்ளது. 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டுடன் பிரகாசமாகவும் வண்ணமயமாகவும் இருக்கிறது. தொலைபேசி மிகச் சிறந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் அதன் பெரிய 5000 mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன் விலை ரூ. 27,999


OnePlus Nord CE3:


இந்த ஸ்மார்ட் ஃபோனானது 6.7 இன்ச் FHD+ டிஸ்பிளேயுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது.  முதன்மை கேமரா Sony IMX890 50 மெகாபிக்சல் சென்சார் மற்றும் OIS கொண்டுள்ளது. மிகவும் திறமையான Qualcomm Snapdragon 782G சிப் மூலம் இயக்கப்படுகிறது. உயர்நிலை கேமிங்கைக் கூட கையாளும் திறனை கொண்டுள்ளது. 80W சார்ஜருடன் கூடிய பெரிய 5000 mAh பேட்டரியை பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை - ரூ. 26,999