Best Camera Phones Under 25000: 25 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்திய சந்தையில், சிறந்த கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


ஸ்மார்ட்ஃபோன்கள்:


இந்தியாவில் 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த கேமரா ஃபோன்களை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான சரியான இடம் தான் இது. பயனர்கள் தங்ளுக்கான ஸ்மார்ட்ஃபோனைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எதிர்பார்புகளை கொண்டிருக்கின்றனர். சிலர் புராசசர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், மற்றவர்கள் சிறந்த கேமரா அம்சங்களை தேடுவர்கள். இது ஒவ்வொரு பயனாளருக்கும், அவரவர் தேவைகளை சார்ந்தும் மாறும். இந்நிலையில்,  இந்தியாவில் 25000க்கு கீழ் உள்ள சிறந்த கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


Realme 11x 5G


Realme 11x 5G மாடலின் தொடக்க விலை 14 ஆயிரத்து 999 ரூபாயாகும். டைமென்சிட்டி 6100+5G சிப்செட்டில் இயங்க, இதில் இடம்பெற்றுள்ள 8-கோர் CPU கட்டமைப்பின் மூலம் வேகத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், இது 64-மெகாபிக்சல் AI கேமரா, 2X இன்-சென்சார் ஜூம் மற்றும் ஹைப்பர்ஷாட் இமேஜிங் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


மோட்டோரோலா மோட்டோ ஜி54 5ஜி


 Motorola Moto G54 5G மாடலின் தொடக்க விலை 15 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. இதன் 50 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ்+ 8 மெகாபிக்சல் கான்ஃபிகிரேஷன் ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, முன் கேமரா 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனில் வருகிறது. 6000mAh பேட்டரியுடன் கூடிய இந்த ஸ்மார்ட் ஃபோன் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது.


Samsung Galaxy F34 5G


சாம்சங்கின் மிட்-ரேஞ்ச் மற்றும் ஹை-ரேஞ்ச் மொபைல் போன்கள் வசீகரமானது என்பத்ல் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் அறிமுகமான Samsung Galaxy F34 5G மாடலின் விலை 18 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல்கள் + 8 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல்கள் என மூன்று கேமராக்கள் பின்புறத்திலும்,  13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும்  உள்ளது.  


Vivo T2 Pro 5G


 Vivo நிறுவனத்தின் T2 Pro 5G மாடலின் தொடக்க விலை 23 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. 64-மெகாபிக்சல்+2-மெகாபிக்சல் கான்ஃபிகிரேஷன் மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா என  இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.  4600mAh பேட்டரியுடன் வேகமாக சார்ஜ் ஆகும் திறனையும் கொண்டுள்ளது.


OnePlus Nord CE 2 Lite 5G


OnePlus நிறுவனத்தின் Nord CE 2 Lite 5G மாடலின் தொடக்க விலை 16 ஆயிரத்து 399 ரூபாயாக உள்ளது. EIS உடன் 64MP பிரதான கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் மற்றொரு 2MP மேக்ரோ லென்ஸ் அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 16MP Sony IMX471 சென்சார் உள்ளது.


 Realme 11 Pro 5G


Realme 11 Pro 5G மாடலின் தொடக்க விலை 23 ஆயிரத்து 999 ரூபாய் ஆக உள்ளது.  ஸ்மார்ட்போன் முழு HD+ டிஸ்ப்ளேவுடன் 6.7 இன்ச் திரை அளவைக் கொண்டுள்ளது.  முதன்மை சென்சார் உடன், இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 16-மெகாபிக்சல் செல்ஃபி சென்சாரும் உள்ளது.


Xiaomi Redmi Note 12 Pro 5G


Xiaomi Redmi Note 12 Pro 5G மாடலின் தொடக்க விலை 23 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது.  இதில் 50 மெகாபிக்சல்கள் + 8 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல்கள் உட்பட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைப் வழங்கப்பட்டுள்ளது.


Vivo Y100A


 Vivo நிறுவனத்தின் Y100A மாடலின் தொடக்க விலை 24 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். சக்திவாய்ந்த டிரிபிள் கேமரா அமைப்பைப் பெருமைப்படுத்தும் விதமாக,  64-மெகாபிக்சல் பிரைமரி லென்ஸுடன் பிரமிக்க வைக்கும் வகையில் விரிவான புகைப்படங்களைப் பிடிக்கிறது . இரண்டு 2-மெகாபிக்சல் லென்ஸ்களும் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிக்காக 16-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.